கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி

ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை கடைபிடிக்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2021, 09:10 AM IST
  • கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை கடைபிடிக்கப்படுகிறது.
கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி title=

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள்,  ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில்  சிக்கல் ஏற்பட்டது. ஐரோப்பிய நாடுகளுக்குள் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறையை கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் கிரீன் பாஸ் சான்றிதழ் உடன் ஐரோப்பிய யூனியம் நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சுலபமாக சென்று வரலாம்.

கிரீன் பாஸ் வழங்குவதற்கான கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் அஸ்ட்ரா செனகா தயாரித்துள்ள பிற  தடுப்பூசியின் பெயர் இடம் பெற்றிருந்த போதிலும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பெயர் இடம்பெறாததால்,  ஐரோப்பிய நாடுகளுக்குச பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ALSO READ | இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு (European Medicines Agency - EMA)இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் (SII) தயாரிக்கப்படும் கோவிஷீல்டு (COVISHIELD) தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் கொடுக்க, முன்னதாக  பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் சம்மதித்த நிலையில், தற்போது பிரான்ஸ் அரசும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. 

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) கோவிட் -19 தடுப்பூசியான கோவிஷீல்ட் செலுத்திக் கொண்ட சர்வதேச பயணிகளை அனுமதிக்கும்  16 வது ஐரோப்பிய நாடாக பிரான்ஸ், சனிக்கிழமை (ஜூலை 17, 2021)  இதற்கு அங்கீகாரம் அளித்தது என, சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி), ஆதர் பூனவல்லா ட்விட்டரில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோவிஷீல்ட் இப்போது 16 ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையில் ஒரு நல்ல செய்தி என்று பூனவல்லா கூறினார். 

ALSO READ | COVID-19 Update: இன்று 2205 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 43 பேர் உயிரிழப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News