Sputnik-V COVID-19 Vaccine: இந்தியாவில் தடுப்பூசி ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றவுடன், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி (Sputnik-V) கோவிட் -19 தடுப்பூசி (Covid-19 Vaccine) இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் (Dr Reddy Labs) தயாரிக்க ஒப்பந்தம். சுமார் 100 மில்லியன் (பத்து கோடி) அளவு தடுப்பூசிகளை தயாரிக்க திட்டம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 83,000 பேர் புதிதாக கொரோனா வைரஸ் (Novel Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 49 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த COVID எண்ணிக்கை 49,30,237 ஆக உள்ளது. அவற்றில் 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் செவ்வாயன்று, கோவிட் -19 க்கு எதிரான போரில், நாட்டில் தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ |
- நற்செய்தி... கொரோனா தடுப்பூசி இந்த வாரம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்..!
- ரஷ்யா உண்மையில் கொரோனா தடுப்பூசியை தயாரித்ததா?.. உண்மை என்ன?
- உலகின் முதல் COVID-19 தடுப்பூசி: 40,000 பேர் மீது இறுதிக்கட்ட சோதனை செய்யும் ரஷ்யா
இதற்கிடையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரண்டு தடுப்பூசி, முதல் கட்ட மனித சோதனைகளை முடித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள தேவையான ஆட்சேர்ப்பு செய்துள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் -ICMR) இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா (Russia Corona Vaccine) கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது. இரண்டு மாதங்களாக மேற்கொண்ட மனித பரிசோதனைக்கு பின்னர் ரஷ்யா இந்த தடுப்பூசியை பதிவு செய்தது.