ரஷ்யாவில் (Russia) மிதமான அறிகுறிகள் மற்றும் குறைவான அறிகுறிகள் கொண்ட கொரோனா (Corona) நோயாளிகளுக்கு ஆர்-பார்ம் (R-Pharm) நிறுவனத்தின் கொரோனாவிர் (Coroanvir) என்னும் மருந்தை விற்பனை செய்ய ரஷ்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த வாரம் இந்த மருந்து விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு கொரோனா மருந்தான அவிஃபவிர் (Avcifavir) என்ற மருந்துக்கு மே மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் அது மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மருத்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை. இரு மருந்துகளும் பவிபிரவிர் (Favipiravir) எனப்படும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ஜப்பானில் அதிக பயன்படுத்தப்படும் மருந்தை அடிப்படையாக கொண்டது.
உலகில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் ஆர்வத்தை இது வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
ALSO READ | உலக COVID தொற்று எண்ணிக்கை 30 மில்லியனைத் தாண்டியது! US, India-வில் மிக அதிக பாதிப்பு!!
ஏற்கனவே கோவிட்-19 தொற்று நோய்க்கான ஸ்பூட்னிக்-வி (Sputnik-V) என்னும் தடுப்பு மருந்து சப்ளைக்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது.
கொரோனாவிர் என்னும் மருந்தின் சப்ளை அடுத்த வாரம் தொடங்கும் என ஆர்-ஃபார்ம் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த கொரோனாவிர் என்னும் மருந்தின் மூன்றாவது கட்ட பரிசோதனையில், 168 நோயாளிகளிடம் பரிசோதித்து பார்க்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மருந்தின் பரிசோதனைக்கு அந்நாட்டு அரசு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது. எனினும் இந்த மருந்தின் மீதான பரிசோதனை சிறிய அளவில் மட்டுமே நடத்தப்பட்டது.
ALSO READ | தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
உலகமே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்பொழுது கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறது.