பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை.. மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா..!!!

கொரோனா நெருக்கடி சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்ய நாளை மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2020, 05:32 PM IST
  • கொரோனா நெருக்கடி சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்ய நாளை மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.
  • டெல்லியில் குறிப்பாக நவம்பரில் நிலைமை மோசமடைந்துள்ளது.
  • மகாராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை.. மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா..!!! title=

புதுடெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ​​பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துவார். முதலமைச்சர்களுடனான பகல்நேர சந்திப்பின் போது, ​​பிரதமர் மோடி கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்வார். 

இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் பிரிவு 144 தடை உத்தரவு ஆகியவற்றை விதிப்பதன் மூலம் பல மாநிலங்கள் ஓரளவு லாக்டவுனை அறிவித்துள்ளதால், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் மாநிலங்களில் பிரதமர் மோடி (PM Narendra Modi)  மற்றொரு லாக்டவுனை அறிவிக்கக்கூடும். இருப்பினும், லாக்டவுன் அறிவிப்பை முடிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும்.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாட்டில் 91 லட்சத்தை தாண்டியுள்ளதால் இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது

நவம்பர் 8 ஆம் தேதி முதல் இந்தியா தினசரி 50,000 க்கும் குறைவான COVID-19 வழக்குகளை பதிவு செய்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியது.

கடந்த 24 மணி நேர நேரத்தில் மொத்தம் 44,059 பேருக்கு புதிதாக COVID-19 தொற்று ஏற்ப்பட்டுள்ள நிலையில், இதில் சுமார் 78 சதவிகித தொற்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான பாதிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லியில் ஒரு நாளில் 6,746 புதிய தொற்று பாதிப்புகளும், மகாராஷ்டிராவில் 5,753 புதிய தொற்று பாதிப்புகளும், கேரளாவில் தினசரி 5,254 புதிய தொற்று பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவின் ( India) தற்போது உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,43,486. மொத்த தொற்று பாதிப்புகளில் இது  4.85 சதவீதமாகும்.

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் வழக்குகள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், முந்தைய நாள் மத்திய மற்றும் அனைத்து மாநிலங்களிலும் நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் நிலை அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

ALSO READ | நம் நாட்டில் உருவாக்கப்படும் COVID Vaccine-ன் இறுதி கட்ட சோதனைகள் விரைவில் முடியும்: Harsh Vardhan

டெல்லியில் குறிப்பாக நவம்பரில் நிலைமை மோசமடைந்துள்ளது. மகாராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

நிலைமையை கட்டுபடுத்தவும், அதிகரித்து வரும் COVID-19 பாதிப்புகளை சமாளிக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளிடம்  உயர் நீதிமன்றம் கூறியது.

ALSO READ | AstraZeneca-Oxford தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 70% தடுப்பாற்றல் கொண்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News