GuinnessRecords: 111 வகை Cheese கொண்ட உலகின் முதல் பீட்சா!

அமெரிக்காவை சேர்ந்த சமையல் கலைஞர், 111 வகை சீஸ் கொண்ட உறுவாக்கப்பட்ட உலகின் முதல் பீட்சாவினை வடிவமைத்துள்ளார்!

Written by - Mukesh M | Last Updated : Mar 26, 2018, 02:44 PM IST
GuinnessRecords: 111 வகை Cheese கொண்ட உலகின் முதல் பீட்சா! title=

அமெரிக்காவை சேர்ந்த சமையல் கலைஞர், 111 வகை சீஸ் கொண்ட உறுவாக்கப்பட்ட உலகின் முதல் பீட்சாவினை வடிவமைத்துள்ளார்!

ஜெர்மணியின் பெர்லின் நகரத்தில் உள்ள வண்டொலி பிட்சா கடையில் இந்த பிட்சா உருவாக்கப்பட்டுள்ளது. உலக சாதனை படைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிட்சாவானது, அளவில் மிகுதியாகிவிட கூடாது என்பதற்காக பயண்படுத்த அனைத்து வகை சீஸ்-களும் 2.6 கி அளவே எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது.

மொஸாரெல்ல, எமெமென்டல், லைசஸ்டெர்ஷையர் சிவப்பு, காம்டே மற்றும் ரேலெட் டி சேவ்ரே வகைகள் முதலிய வகை சீஸ்-கள் கொண்டு இந்த பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறவைத்த இந்த பிட்சாவினை உண்பதற்காக துடித்தப் போதிலும், கின்னஸ் சாதனையாளர் நீதிபதிகள் ஆய்வினை முடித்தப் பிறகே இந்த பிட்சா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிட்சாவினை ருசித்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில்... "இந்த பிட்சாவின் ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு ருசியினை கொண்டிருந்தது" என தெரிவித்துள்ளார்.

Trending News