வெயில் காலம் வந்தாலே நமது சருமம், கூந்தல் பொலிவிழந்து வறண்டு விடும். வெயிலில் உடல் படும் இடங்கள் எல்லாம் நிறம் மாறி நமக்கு தொல்லை தரும். ஆனால் அந்த கவலைகளில் இருந்து தப்பிக்க நமக்காக கொஞ்சம் நாம் நேரம் செலவழிக்க வேண்டும். அந்த வகையில் ஆரஞ்ச் பழத்தை கொண்டு நாம் எப்படி நமது வெயில் கால பராமரிப்புகளை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ஆரஞ்ச் பழத்தில் வைட்டமின் சி அதிகம் என்பதால் தோல் பளபளக்கும்.
ஆரஞ்ச் பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் முகப்பருக்களை கட்டுப்படுத்தும். அதோடு நம் முகத்துக்கு அதிக பொலிவு தரும். வீட்டிலேயே எப்படி ஆரஞ்ச் பழத்தை கொண்டு முகத்தை அழகு படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆரஞ்ச் தோல் பவுடர் - ஆரஞ்ச் பழ தோலை வெயிலில் நன்றாக காய வைத்து மிக்சியில் பவுடர் போல அரைத்து எடுத்தால், ஆரஞ்ச் தோல் பவுடர் ரெடி. காற்று புகாத டப்பாவில் இந்த பவுடரை 15 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
1. ஆரஞ்ச் தோல் மற்றும் தேங்காய் பால்
ஆரஞ்ச் தோல் பவுடர் தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்க வழிவகை செய்யும். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடர், 2 ஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் கப் தேய்காய்ப்பால் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும். வெயில் படும் இடங்களில் எல்லாம் இந்த கலவையை பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | நரை முடி பற்றி கவலையா? இந்த செய்முறையைப் பின்பற்றவும்
2. ஆரஞ்ச் தோல், லெமன் மற்றும் சந்தனம்
வெயில் காலங்களில் முகம் கருப்பதை தடுக்கவும், பளபளக்கவும் இந்த பேக் உபயோகமாக இருக்கும். 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடர், ஒரு ஸ்பூன் லெமன் சாறு மற்றும் சந்தன பவுடரை கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலக்க வேண்டும். அதனை முகம், கைகளில் தேய்த்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு முகத்தை நன்றாக கழுவி விடவும். இதனால் முகத்தில் எண்ணெய் வடிவது மற்றும் முகப்பரு குறையும்.
3. ஆரஞ்ச் தோல் பவுடர் மற்றும் தயிர்
தோல் புத்துணர்ச்சி பெறவும், ஒரே மாதிரியான நிறம் பெறவும் இந்த ஃபேஸ் பேக் உதவும். ஒரு ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடருடன் இரண்டு ஸ்பூன் தயிரை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களில் முகத்தை கழுவினால் முகம் மிருதுவாக இருக்கும். தயிர் முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும். ஆரஞ்ச் பவுடருடன் சேரும் போது இன்னும் பல நன்மை தரும்.
4.ஆரஞ்ச் தோல் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்
வைட்டமின் சி அதிகம் கொண்ட ஆரஞ்ச் தோல் பவுடரில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் தொங்கும் சதை குறையும். தோலை இறுக்கமாக்கும். பல நாட்களாக நீங்காத தழும்புகள் நாளடைவில் மறைந்து போகும். 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடரில் தேவையான அளவுக்கு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். பொதுவாகவே ரோஸ் வாட்டரை முகத்தில் தினமும் இரவில் தூங்கும் முன் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகம் சற்று புத்துணர்ச்சி பெறும்.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் இந்த டீயை குடித்தால் தொப்பைக் காணாமல் போயிடும்
5.ஆரஞ்ச் தோல் பவுடர் மற்றும் ஓட்ஸ்
முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் பிளாக்ஹெட்ஸ்களை இந்த பேக் நீக்கும். 2 ஸ்பூன் ஆரஞ்ச் தோல் பவுடருன் 1 ஸ்பூன் ஓட்ஸை கலந்து சிறிது பால் ஊற்றிக்கொள்ளலாம். அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். ஸ்கிரப் போல பயன்படுத்தலாம். 10 நிமிடங்கள் மசாஜ் செய்தபின் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR