Omicron மாறுபாடு உடலின் இந்த பாகங்களை பாதிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

ஓமிக்ரான் மாறுபாட்டில் மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவை குறைவாக இருப்பது நிம்மதியளிக்கிறது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 03:36 PM IST
  • ஓமிக்ரான் மாறுபாடு நுரையீரலை பாதிக்காது என்பது ஒரு நல்ல விஷயமாகும்.
  • ஓமிக்ரான் மாறுபாடில் ஆக்சிஜன் தேவைப்படுவது, ஐசியூ-வில் அனுமதி போன்ற போன்ற பிரச்னைகள் வெகு சிலருக்கே ஏற்படுகின்றன.
  • கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரான் மாறுபாட்டின் தீவிரம் குறைவாக உள்ளது.
Omicron மாறுபாடு உடலின் இந்த பாகங்களை பாதிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை title=

Omicron Variant: கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றது. 

கொரானாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால், இந்த மாறுபாட்டில் மக்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவை குறைவாக இருப்பது நிம்மதியளிக்கிறது. இதன் காரணமாக, இது குறைவான ஆபத்து கொண்டதாக கருதப்படுகிறது. 

எனினும், ஒமிக்ரான் மாறுபாட்டையும் (Omicron Variant) இலகுவாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எப்போதும் பொதுவான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். ஒருமுறை தொற்றால் பாடிக்கப்பட்டுவிட்டால், சிலருக்கு அது பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. கோவிட் -19 நோயால் உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஓமிக்ரான் மாறுபாட்டால் உடலின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது?

ஓமிக்ரான் மாறுபாடு நுரையீரலை பாதிக்காது என்பது ஒரு நல்ல விஷயமாகும். இது மூச்சுக்குழாய், தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இதனால், ஆக்சிஜன் தேவைப்படுவது, ஐசியூ-வில் அனுமதி போன்ற போன்ற பிரச்னைகள் வெகு சிலருக்கே ஏற்படுகின்றன. 

ALSO READ | Omicron தொற்று: பொதுவான, லேசான, தீவிரமான அறிகுறிகளின் முழு பட்டியல் இதோ 

இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு விஷயம் என்னவென்றால், இந்த மாறுபாட்டின் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மற்றொன்று என்னவென்றால், நம்மில் பெரும்பாலோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகையால், தடுப்பூசியின் பாதுகாப்பும் இருப்பதனால், ஓமிக்ரானின் பாதிப்பு உடலில் குறைவாகவே உள்ளது. 

இருப்பினும், ஓமிக்ரான் (Omicron) தொற்று தோள்பட்டை வலி, முழங்கால்கள், தொண்டை வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி உடலின் பல பாகங்களை பாதிக்கிறது.

ஓமிக்ரான் மாறுபாடு எவ்வளவு ஆபத்தானது?

கொரோனாவின் டெல்டா (Delta Variant) மாறுபாட்டை விட ஓமிக்ரான் மாறுபாட்டின் தீவிரம் குறைவாக உள்ளது. இருப்பினும், இதனால், முந்தைய மாறுபாட்டைப் போல, நோயை கடுமையாக்கவும் முடியும். 

கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளில் நமக்கு கிடைத்த படிப்பினைகளை வைத்துப்பார்த்தால், ஓமிக்ரானையும் நாம் சாதாரணமாக மதிப்பிட முடியாது. ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அது கடுமையான நோயாக மாறும் அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். 

மறுபுறம், ஏற்கனவே பிற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், வயதானவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ஆகியோர், ஓமிக்ரானால், தீவிரமாக பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | COVID Ear: கொரோனாவினால் காது வலி - இரைச்சல்? மருத்துவர் கூறுவது என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News