Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா

ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் தீவிரமானவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2022, 01:10 PM IST
  • ஆரோக்கியமா அல்லது சோம்பேறித்தனமா?
  • உழைக்க மறுத்தால் உடல்நலக் கோளாறு நிச்சயம்
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆராய்ச்சி விடுக்கும் எச்சரிக்கை
Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா title=

உணவுகளை பதப்படுத்தி பயன்படுத்தும் பழக்கம் இன்று அதிகரித்துள்ளது. ஆனால், அவசியம் ஏற்பட்டால் தவிர முடிந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

குறிப்பாக, உடல் ஆரோக்கியம் குன்றியவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 

ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் தீவிரமானவை. 

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

முடிந்தவரை, உங்கள் குழந்தைகளுக்கு, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், தின்பண்டங்கள்,  மிட்டாய்கள், சோடா, இனிப்பு பழச்சாறுகள், யோகர்ட்கள், பதப்படுத்தப்பட்ட சூப்கள், பீட்சா, ஹாட் டாக், பர்கர்கள் மற்றும் சிக்கன் நகெட்ஸ் போன்ற தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலக்கி வைக்கவும்.

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ultra-processed foods) அவர்களின் உடல் தகுதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

மேலும் படிக்க | ஆரோக்கிய நன்மை அதிகமாக உள்ள ஐஸ் டீ

சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழக (Sacred Heart University) ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த உணவுகளை குறைவாக உட்கொள்ளும் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, ​ அதிகம் உட்கொள்ளும் குழந்தைகளின் உடல் இயக்கம் மோசமாவதோடு, இருதய ஆரோக்கியம் குறைவதாக தெரியவந்துள்ளது.

பள்ளிக்கு அனுப்பும் உணவுகளில் இன்று அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் பயன்படுத்தப்படுவது கவலைகளை அதிகரித்திருக்கிறது. அதற்கு பதிலாக, தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் உணவைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு பெற்றோருக்கு நினைவூட்டுகிறது.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தைகளுக்கு ஏன் மோசமானவை என்பதற்கான கூடுதல் காரணங்கள் இவை. குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவை கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளின் பட்டியலில் முதல் 5 இடத்தை பிடிக்கும் குறைபாடுகள் இவை.

புற்றுநோய் அபாயம்
அதிக பதப்படுத்தப்பட்ட அல்லது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால், மார்பக, புரோஸ்டேட் மற்றும் குடல் (colorectal) புற்றுநோய்கள் உட்பட சில புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.


 
ஊட்டச்சத்துக்கள் குறைவு ஆனால் கலோரிகள் அதிகம்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மோசமானவை, ஏனெனில் அவற்றில் சர்க்கரை, உப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய்கள் அதிகமாகவும், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் உள்ளன.
 
உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, மனச்சோர்வு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் சூப்பர் உணவுகள்

டைப்-2 நீரிழிவு நோய்
மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பின்மையால் (Health Care)குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள் பருமனானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உணவு ஒவ்வாமை 
ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைக்ரோவேவ் உணவுகள் மற்றும் வறுத்த அல்லது பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சிகள் ஆகியவற்றில் இருக்கும் மேம்பட்ட கிளைசேஷன் இறுதிப் பொருட்கள் (advanced glycation end-products (AGEs)) குழந்தைகளின் உணவு ஒவ்வாமைக்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு எச்சரித்துள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News