அதிகரிக்கும் குடல் புண் பிரச்சனை..! வீட்டு மருத்துவம் மூலம் போக்கலாம்

தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக குடல் புண்களும் வருகின்றன. அல்சர் எனப்படும் இவை வந்தவிட்டால், ஒருவரால் நிம்மதியாகவே இருக்க முடியாது. அப்படியான குடல் புண்களை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2023, 03:12 PM IST
  • குடல் புண்களால் தொல்லையா?
  • வீட்டு மருத்துவம் மூலம் நிவாரணம்
  • மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்
அதிகரிக்கும் குடல் புண் பிரச்சனை..! வீட்டு மருத்துவம் மூலம் போக்கலாம் title=

குடல் புண்கள் வருவதற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவு முறை மற்றும் உணவுகள். இவற்றை சரி செய்தால் மட்டுமே முதலில் குடல் புண்கள் வராமல் தடுக்க முடியும். வந்துவிட்டதே அதற்கு என்ன செய்வது என நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், எளிய வீட்டு மருத்துவம் மூலம் குணமாக்கலாம். எந்தெந்த வழிகளில் குடல் புண்களை சரி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

குடல் புண்களை சரிசெய்யும் வழிமுறைகள் இங்கே...

தேன் சாப்பிட்டால் நிவாரணம்

குடல் புண் பிரச்சனை இருப்பவர்கள் உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும். வயிற்றில் எரிச்சல், வயிற்றில் எரிச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

மேலும் படிக்க | அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைக்கணுமா? அப்போ தினமும் இதை மட்டும் சாப்பிட்டுங்கள்

வயிறு கோளாறுகளுக்கு தீர்வு

அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும். ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.

குடல் புண்கள் ஆறும்

குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும். பத்து கொன்றை மரப்பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும். சீதளபேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும். 1 டம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்த்துள்ள சளி எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய் மருத்துவம்

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை.

மேலும் படிக்க | Health Tips: என்னங்க சொல்றீங்க..!இந்த 5 காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News