Mpox Clade 1b: குரங்கு அம்மையின் ஆபத்தான வகை இந்தியாவில்... துரித கதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Mpox Clade 1b: குரங்கு அம்மையின் ஒரு வகையான Mpox Clade 1b, உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நோயாளி பற்றி தெரியவந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 24, 2024, 10:28 AM IST
  • கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு நபருக்கு Mpox Clade 1b தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த நோயாளியின் வயது 38.
  • அவர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பினார்.
Mpox Clade 1b: குரங்கு அம்மையின் ஆபத்தான வகை இந்தியாவில்... துரித கதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் title=

Mpox Clade 1b: குரங்கு அம்மை தொற்று உலக அளவில் வேகமாக பரவி வருகின்றது. குரங்கு அம்மையின் ஒரு வகையான Mpox Clade 1b, உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நோயாளி பற்றி தெரியவந்துள்ளது. 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு நபருக்கு Mpox Clade 1b தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளியின் வயது 38 என்றும் அவர் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திரும்பினார் என்றும் கூறப்படுகின்றது. தற்போது நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mpox 

Mpox என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் நோயாகும். இது பாதிக்கப்பட்ட நபரின் தோலில் உள்ள புண்கள் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகள், பயன்படுத்திய படுக்கைகள் மூலம் பரவுகிறது. இந்த நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடையே நேரடி தொடர்பு மூலமும் பரவுகிறது. WHO இதை இரண்டு முறை, முதலில் ஜூலை 2022 -இலும், பின்னர் ஆகஸ்ட் 2024 -இலும் பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 2024 -இல் உலக அளவில் குரங்கு அம்மை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 

கிளேட் 1பி வகை

இந்தியாவில், கேரளாவில் முதன்முறையாக இந்த வைரஸின் கிளேட் 1பி வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தீவிர நிலையாக கருதப்படுவதால், இது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. முன்னதாக, டெல்லியில் கிளேட் 2 ஸ்ட்ரெய்னால் பாதிக்கப்பட்ட நோயாளி பற்றி கண்டறியப்பட்டது. எனினும், இந்த வகை WHO இன் அவசர எச்சரிக்கையின் கீழ் வரவில்லை என்பது குறிபிடத்தக்கது.

Monkeypox: இதன் அறிகுறிகள் என்ன? (Symptoms of Monkeypox)

- தொற்று ஏற்பட்ட 14 நாட்களுக்குள் Mpox இன் அறிகுறிகள் தோன்றக்கூடும். 
- காய்ச்சல், தலைவலி, சோர்வு, கழுத்து அல்லது அக்குள் நிணநீர் கணுக்களின் வீக்கம் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளில் அடங்கும். 
- இப்படிப்பட்ட ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக ஒன்று முதல் நான்கு நாட்களுக்கு இருக்கும்.
- அதன் பிறகு தோல் வெடிப்பு, புண்கள் ஆகியவை உருவாகின்றன.
- தோல் புண்கள் பெரும்பாலும் சின்னம்மை போல் இருப்பதால், இதை தனித்து அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம். 
- எனினும், mpox இல் இந்த புண்கள் பெரும்பாலும் முகம், கைகள், கால்கள் மற்றும் மார்பில் தோன்றும். 
- குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்னவென்றால், குரங்கு அம்மையின் காயங்கள் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் ஏற்படலாம், ஆனால், தட்டம்மையில், இப்படி குறைவாகவே நிகழ்கிறது. 
- தீவிர சந்தர்ப்பங்களில், இந்த புண்கள் பிறப்புறுப்புகளைச் சுற்றியும் ஏற்படலாம்.
- மேலும், இடுப்பு பகுதியில் உள்ள நிணநீர் கணுக்களின் வலியுடன் கூடிய வீக்கமும் ஏற்படக்கூடும். 
- அரிதாக வாய் புண்கள் மற்றும் கண் வீக்கம் ஏற்படலாம்.

மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென குறைய... காலை உணவில் சாப்பிட வேண்டியதும்... சாப்பிடக் கூடாததும்

குரங்கு அம்மை தொற்று: இதை எப்படி தடுப்பது?

MPOX உலக அளவில் வேகமாக பரவி வருவதால், இந்த நோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வைரஸ் முக்கியமாக தோலுடன் தோல் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஆகையால், குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய அல்லது பாலியல் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். 

இது தவிர, நோயாளிகளின் உடைகள், படுக்கை அல்லது பிற பொருட்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தவும், கூடிய விரைவில் அவருக்கு சிகிச்சை அளிக்கவும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் வசிப்பவர்களும் குரங்கு அம்மை தொற்றுநோயைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முகக்கவசம் (மாஸ்க்) அணிவது மற்றும் சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை தவறாமல் சுத்தம் செய்வது போன்றவை தொற்றுநோயைத் தடுக்க நாம் எடுக்ககூடிய முக்கியமான நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

சமீபத்திய அதிகரித்து வரும் குரங்கு அம்மை தொற்றை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்கவும், சாத்தியமான MPox நோயாளிகளின் பரிசோதனையை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு,  மருத்துவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் அவசர நிலையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும்.... ஆபத்தான அறிகுறிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News