புதுடெல்லி: குரங்கு பாக்ஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 10 வாரங்கள் வரை நீடிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் 12 நாடுகளுக்கு மேல் பரவிய அரிய வைரஸ் நோய் குரங்கு அம்மை என்று அறியப்படுகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்பட்ட இந்த தொற்று, தற்போது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
எனவே, வைரஸ் எவ்வாறு பரவுகிறது மற்றும் அது உடலில் எவ்வளவு காலம் நீடித்து மற்றவர்களுக்கு தொற்றுநோயைப் பரப்புகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெரும்பாலும் கொறித்துண்ணிகளிடையே பரவுகிறது. இது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட குரங்குகளில், பாக்ஸ், அதாவது அம்மை தொற்று ஏற்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதற்கு குரங்கு அம்மை என்ற பெயர் வந்தது.
மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO
குரங்கு பாக்ஸ் வைரஸ், ரத்தம் மற்றும் தொண்டையில் தங்கிவிடும்
லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், குரங்கு பாக்ஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் 10 வாரங்கள் வரை நீடிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குரங்கு அம்மை நோய் தொற்றியவர்கள், அதை பிறருக்கு பரப்புகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, தோல் வெடிப்பு மற்றும் புண்கள் என பொதுவான அறிகுறிகளே இருக்கிறது. இருப்பினும், தோலில் உள்ள சொறி மற்றும் புண்கள் மறைந்த பிறகும், உடலில் வைரஸ் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குரங்கு அம்மை நோய் அறிகுறிகள்
குரங்கு பாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவுடன், ஒருவருக்கு இந்த அறிகுறிகள் ஏற்படலாம் -
- காய்ச்சல்
- தலைவலி,
- தசைவலி
- முதுகுவலி
- சுரப்பிகளில் வீக்கம்
- குளிர் மற்றும் சோர்வு
மேலும் படிக்க | குரங்கு காய்ச்சல் தொடர்பாக இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
நோயின் முதல் அறிகுறிகள் ஏற்பட்ட சில நாட்களில், தட்டம்மை நோய் பாதிப்பில் ஏற்படுவது போன்ற சொறி உட்பட பல அறிகுறிகள் தோன்றும். முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இந்த புண்கள் பரவுகின்றன. சொறியாக இருந்து சிரங்குகளாக மாறி, அவை உடலில் இருந்து உதிர்ந்துவிடும்.
வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தட்டம்மை வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு பாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது. கோவிட்-19 போல இது காற்றில் பரவாது, ஆனாலும், பரவக்கூடியது. எனவே, குரங்கு அம்மை நோய் ஏற்படாமல் ஒருவர் பாதுகாப்பாக இருக்கக்கூடிய வழிகளைப் தெரிந்துகொள்வது அவசியம். இவற்றில் சில:
கை சுகாதாரத்தை பராமரிக்கவும்.
விலங்குகளின் மலத்திலிருந்து விலகி இருங்கள்.
தோல் வெடிப்புகள் அல்லது கொப்புளங்கள் உள்ளவர்களிடமிருந்து தூரத்தை பராமரிக்கவும்.
சமைக்காத இறைச்சியை உண்ணக் கூடாது. நன்கு சமைத்த இறைச்சியை மட்டுமே சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO
நோய் ஏற்பட்டவர்களுக்கு, தோல் பராமரிப்பு, வலி நிவாரணம் வழங்குதல், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டால் சிகிச்சையளித்தல் மற்றும் உளவியல் ஆதரவு உள்ளிட்ட சிகிச்சைகள் மூலம் மருத்துவர்கள் சிக்கையளிக்கின்றனர்.
நோயின் தீவிரமாக இருந்தால், பெரியம்மை நோயை இலக்காகக் கொண்ட ஒரு வைரஸ் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR