கூந்தலை இயற்கையாக அழகாக்க, பெரும்பாலானோர் தலைமுடியில் மருதாணியை பூசுவார்கள். பலர் மருதாணியில் காபி அல்லது முட்டையை கலந்து உபயோகிப்பார்கள், ஆனால் மருதாணியில் பாதாம் எண்ணெயையும் கலக்கலாம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இப்படி கலந்து தேப்பதால் ஒன்றல்ல பல பெரிய நன்மைகளை பெறலாம். இந்த கலவை வெள்ளை முடியை கருமையாக்குவதுடன், பொடுகை நீக்குவதிலும் நன்மை பயக்கும். உண்மையில், மருதாணியில் பாதாம் எண்ணெயை தடவுவது முடிக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் “வைட்டமின் ஈ” அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான். இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும். மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது. அதன்படி மருதாணி முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும். எனவே மருதாணியுடன் பாதாம் எண்ணெயை முடியில் தடவினால், என்ன பிரச்சனைகள் நீங்கும் என்பதை அறிவோம்.
1. வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்
முடியை கருமையாக்க ரசாயன ஹேர் டையை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெள்ளை முடி பிரச்சனைக்கு மருதாணி மற்றும் பாதாம் எண்ணெயின் பேஸ்ட் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முடி வெள்ளையானவர்கள் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை கருமையாக்க உதவும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
2. முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்
இதனுடன், முடி வலுவிழந்ததாக நீங்கள் உணர்ந்தால் இந்த பேஸ்ட்டை கண்டிப்பாக முயற்சிக்கவும், ஏனெனில் பாதாம் மற்றும் மருதாணி பேஸ்ட் உங்கள் முடி வளர்ச்சியை வலுப்படுத்தும்.
3. பொடுகு தொல்லை நீங்கும்
இதனுடன், மாறிவரும் காலநிலை மற்றும் மோசமான வாழ்க்கை முறையினால் முடியில் பொடுகு பிரச்சனையும் பொதுவானதாகிவிட்டது. உங்கள் தலைமுடியில் பொடுகு பிரச்சனையால் நீங்களும் போராடிக் கொண்டிருந்தால், இந்த பேஸ்ட்டை கண்டிப்பாக முயற்சிக்கவும். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.
எனவே ஒவ்வொருக்கும் கூந்தலின் தன்மை, கூந்தல் சார்ந்த பிரச்னைகள் வேறுபடும். கூந்தல் பிரச்னைகளைட் தடுக்க நாம் அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து ஷாம்பு வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்னைகளுக்கு குட்பை சொல்லலாம்.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR