Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்க எளிய வீட்டு வைத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2022, 09:27 PM IST
Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க் title=

நமது உடலின் ஒவ்வொரு பாகமும் மிகவும் முக்கியமானது. உடலின் ஒரு பகுதியில் பிரச்னை ஏற்பட்டால், அது முழு உடலையும் பாதிக்கும். உடலில் இருந்து நச்சு இரசாயனங்களை அகற்ற கல்லீரல் உதவுகிறது. இது தவிர, கல்லீரல் பல தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களைச் சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 

கல்லீரலுக்கு பல செயல்பாடுகள் இருக்கும்போது, ​​அதை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். லிவர் டிடாக்ஸ் செய்வது இப்போதெல்லாம் மிகவும் முக்கியமானது. எனவே, கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்க எளிய வீட்டு வைத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

கல்லீரலை நச்சுக்களை நீக்கும் வீட்டு வைத்தியம்

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

மஞ்சள் நீர்

சமையலில் ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் மஞ்சள் கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது. மஞ்சள் நீர் உடலில் என்சைம்களை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. இது உணவுடன் வயிற்றுக்குள் சென்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீர்

உடலில் இருந்து கொழுப்பைக் குறைக்க, ​​பலர் அடிக்கடி எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். எலுமிச்சை கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்குகிறது. தினமும் ஒரு கிளாஸ் எலுமிச்சை மற்றும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

கல்லீரல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், இதற்கு உணவு மற்றும் பானங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளுக்கும், மது போன்ற கெட்ட பழக்கங்களுக்கும் குட்-பை சொல்லி கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

 (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News