உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா, புற்றுநோய் மருந்துகளில் இருப்பதாக வெளியான தகவல்கள் சர்வதேச சமூகத்தை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரைக் காப்பாற்ற பயன்படுத்தும் மருந்துகளே, உயிரை வாங்கினால் என்ன செய்வது என்று அச்சத்தில் நோயாளிகள் உறைந்து போயுள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கீமோதெரபியில் மெத்தோட்ரெக்ஸேட் ஊசியில் கொடிய பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே குறைவாக உள்ள நிலையில், அவர்களை காப்பாற்றக் கொடுக்கும் கீமோதெரஃபி மூலம் இந்த பாக்டீரியா நோயாளிகளின் உடலுக்குள் நுழைந்தால் உயிர் பலியாகும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்க்கான மருந்துகளில் கொடிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை தெரிவித்துள்ளது. Celon Labs என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த பொருட்கள் குறித்து WHO ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் ஏமன் சுகாதார அதிகாரிகள் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Celon Labs நிறுவனம் தயாரித்த புற்றுநோய் மருந்தில் பாக்டீரியாக்கள் இருந்ததை அடையாளம் கண்டுள்ளனர். இந்த மருந்தை சோதனை செய்த பிறகு, இது தரம் குறைவானதாக இருந்தது கண்டறியபட்டுள்ளது.
மேலும் படிக்க | அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்கிறதா... மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
சிகிச்சை வழங்கப்பட்ட சில குழந்தைகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து, இந்த மருந்தை பரிசோதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 'மெத்தோட்ரெக்ஸேட் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் ஏற்கனவே மருந்தின் பக்க விளைவுகளால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்தால், புற்றுநோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத சந்தைகள் மூலம் லெபனான் மற்றும் ஏமன் என இரு நாடுகளுக்கு இந்த மருந்துகள் சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. MTI2101BAQ பேட்ச் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் மற்றும் இரு மேற்கு ஆசிய நாடுகளிலும் "கட்டுப்படுத்தப்பட்ட விநியோக" நிலைமைகளின் கீழ் தயாரிக்கப்படுகிறது.
புற்றுநோய் மருந்தில் பாக்டீரியாக்கள் இருந்தது தொடர்பாக, தெலுங்கானா அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. சிலோன் ஆய்வகத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ள தெலங்கானா மாநில அரசு, மருந்து உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக, தெலுங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் இணை இயக்குனர் ஜி ராம்தான் கூறினார். .
சிலோன் லேபரேட்டரீஸ் என்பது புற்றுநோயியல் மற்றும் தீவிர சிகிச்சை மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு சிறப்பு ஜெனரிக்ஸ் நிறுவனமாகும்.
மேலும் படிக்க | டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டு சிறந்தது! மோசடி செய்யும் வாய்ப்புகள் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ