Bird Flu H5N1 Virus Vs Corona Virus : உலகளவில் பரவிய கொரோனா நோயின அசுரத்தனமான தாக்குதல், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவின் முதல் அலை, இரண்டாம் அலை என இரு முறையில் இந்த நோய் பாதிப்பில் சிக்கி மீண்டவர்களும் உள்ளனர். பல லட்சம் பேரின் உயிரை பறித்த இந்த நோய், உலகளவில் பொருளாதாரத்தையும் நிலைகுலைய செய்தது. இந்த நோயின் ருத்ர தாண்டவம் தாங்காமல் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை பல மாதங்களுக்கு அறிவித்தது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனாவின் தாண்டவம், பல மாதங்களுக்கு தொடர்ந்தது. இதனால், கிடுக்கிப்பிடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. அதன் பிறகுதான் நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கொரோனாவில் இருந்து மீண்டு தற்போதுதான் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ அறிஞர்கள் பெரிய குண்டை தூக்கி பாேட்டுள்ளனர்.
கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்!
H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக மாறலாம் என மருத்துவ அறிஞர்கள் பகீர் கிளப்பியுள்ளனர். இந்த நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நோய் பாதிப்பு, உலகளவில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவ அறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
பிட்ஸ்பர்க் நகரில் உள்ள சுரேஷ் குச்சுப்புடி எனும் மருத்துவர், இந்த நோய் பாதிப்பு குறித்த எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட H5N1 பறவைக்காய்ச்சல், பாலூட்டி இன விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நோய் ஏற்கனவே பல்வேறு வகைகளில் பரவ ஆரம்பித்து விட்டதாகவும் இன்னொரு கொடிய நோய்க்கு நம்மை நாம் தயார் படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
டெக்ஸாசில் உள்ள ஒருவருக்கு H5N1 வைரஸின் ஒரு நோய் வகையான ஏவியன் இன்ஃப்ளுவன்ஸா என்ற பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், இது அவருக்கு மாடுகளிடம் இருந்து பரவியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நோய் பாதிப்பிற்கான எதிர்ப்பு சக்தி, மனிதர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ள அவர், இது மிகவும் கவலைக்குறிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார். இந்த நோய் பாதிப்பு, உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியம், கடந்த புதன்கிழமை அன்று (ஏப்ரல் 3) எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனாவை விட கொடிய நோய் பாதிப்பு என கூற காரணம் என்ன?
உலக சுகாதார மையத்தின் தரவுகளின் படி, 2003ஆம் ஆண்டில் இருந்து, H5N1 வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம், இந்த நோய் வந்தவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், கொரோனா நோய் பாதிப்பின் போது உயிரிழப்பு விகிதம் 0.1 சதவிகிதமாக இருந்து, பின்னர் 20 சதவிகிதமாக மாறியது.
மேலும் படிக்க | கோடையில் தினமும் எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்... காரணம் இது தான்..!!
H5N1 ஃப்ளூ என்றால் என்ன?
இதனை உரையாடல் வழக்கில் பறவை காய்ச்சல் என கூறுவர். இந்த வைரஸ் நோய் பாதிப்பு பெரும்பாலும் பறவைகளைத்தான் தாக்கும். H5N1 வைரஸ், கோழி போன்ற பறவைகளை வளர்க்கும் பண்ணைகளில் இருந்து பரவுமாம். மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டி உயிரினங்களுக்கும் (Mammals) இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. பறவையின் எச்சம் அல்லது நோய் பாதிப்பு ஏற்பட்ட பறவையுடன் நேரடி தொடர்பில் இருந்தால் இந்த நோய் எளிதில் பரவி விடும்.
H5N1 நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள்:
>காய்ச்சல்
>இருமல்
>தொண்டை வலி
>குளிர் காய்ச்சல்
>மூச்சு விடுவதில் சிரமம் உள்பட பல்வேறு அறிகுறிகள், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட மனிதர்களுக்கு காணப்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொங்கும் தொடை சதையை வேகமாக குறைக்க..‘இதை’ செய்யுங்கள் போதும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ