தயிரில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் தயிரை பலர் முக்கிய நிகழ்வுகளான தேர்வு அல்லது வேலைக்கு செல்லும் போது, தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், அந்த காரியம் வெற்றியில் முடியும் என்று பலர் கருதுகின்றனர்.
சிலர் தினமும் மதியம் உணவு உட்கொள்ளும் போது, தயிரை (Curd) சாதத்துடன் சேர்த்து சாப்பிடாமல், தனியாக ஒரு பௌலில் சர்க்கரை (Sugar) சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் தயிரில் லாக்டிக் அமிலம் அதிகம் இருப்பதோடு, நல்ல பாக்டீரியாவான புரோபயோடிக்குகளும் ஏராளமாக நிறைந்துள்ளது.
ALSO READ | Health Tips: உடலின் பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் தயிர்...!!
இந்த தயிரை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கீழே பார்போம்.,
* தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கப்படும். குறிப்பாக கோடையில் இப்படி சாப்பிடுவதால், அதிக வேலையால் வியர்வையின் மூலம் இழந்த சத்துக்களை மீண்டும் பெற்று, சுறுசுறுப்பாக இருக்கலாம்.
* தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஏராளமான அளவில் உள்ளது. இவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க தேவையான சத்துக்களாகும். ஒருவர் தயிருடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸைத் தடுக்க உதவி, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் ஏராளமான அளவில் நிறைந்திருப்பதால், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்த உதவி, உடலை நோய்த்தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். மேலும் தயிர் எளிதில் செரிமானமாகும். எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் கூட இதை சாப்பிடலாம். ஏனெனில் இது நொதிக்கும் செயல்முறையின் போதே, லாக்டோஸை உடைத்துவிடுவதால், எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
* கார்டிசோல் என்னும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் தான், இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குகின்றன. தயிரில் உள்ள கால்சியம், இந்த கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைத்து, எடையைக் குறைக்க உவும். மேலும் தயிர் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். இதனால் கண்ட உணவுகளை உண்பது தடுக்கப்படும்.
* தயிரில் எளிதில் கரையக்கூடிய புரோட்டீன் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் க்ரீக் தயிரை சாப்பிடுவதால், இதய நோயின் அபாயம் குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக ப்ளேவர் சேர்க்காத தயிரைத் தான் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் தயிர் சாப்பிடுவதே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR