காலையில் பழ ஜூஸ் குடிக்கும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்கு தான்!

பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும்  தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2022, 07:55 AM IST
காலையில் பழ ஜூஸ் குடிக்கும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்கு தான்! title=

பெரும்பாலானோருக்கு காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கும் வழக்கம் உள்ளது. பிரெஷ் பழங்களை வைத்து தயாரிக்கப்படும் பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும்  தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். பழச்சாறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியது என்றாலும்,  வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜூஸில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் காலை வேளையை ஜூஸுடன் தொடங்க விரும்புகின்றனர். ஆனால் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் பல தீமைகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே அந்த தீமைகளை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

அதிக சிட்ரஸ் உள்ள் பழங்களான ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்றவற்றின் சாறுகளை காலையில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பழச்சாறுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது உங்கள் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இது அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் எனக் கூற இயலாது.

இது தவிர, காலையில் வெறும் வயிற்றில், ஜில்லென்று பழச்சாறு  உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் காலையில் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது வயிறு மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. எனவே குளிர்ச்சியான பழ ஜூஸ் காரணமாக சளி ஏற்படலாம். உங்கள் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, காலையில் எழுந்தவுடன் ஜூஸ் அருந்தும் பழக்கத்தை மாற்றி, சிறிது உணவு அருந்திய பின், ஜூஸை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது உங்களுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News