Foods & Habits for Lungs Detox: இந்தியாவின் தலைநகரான டெல்லி உலகின் 'மிகவும் மாசுபட்ட' நகரமாக அறிவிக்கப்பட்டது. தில்லியில் வசிக்கும் மக்களின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில், நகரத்தின் மிக மோசமான AQI அளவுகள் பற்றிய அறிக்கைகளை உலகளாவிய சுகாதார அமைப்புகள் மேற்கோள் காட்டின. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) படி, நவம்பர் 1, 2023 அன்று டெல்லியின் AQI 351 ஆக இருந்தது, இது "மிகவும் மோசமானது" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் காற்றின் தரம் ஆபத்தானது மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்நிலையில், உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது ஏற்படும் பாதிப்புகள்
நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், காற்று மாசுபாடு ஒரு ஆபத்தான நிலையாக மாறியுள்ளது. மோசமான காற்றின் தரம் சுற்றுச்சூழலைப் பாதிப்பது மட்டுமல்லாமல், மனித ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக நமது சுவாச அமைப்புக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சில எளிய மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், உடனடி காற்று மாசுபாட்டிலிருந்து உங்கள் நுரையீரலைக் காப்பாற்ற முடியும்.
காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 10 குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கும் போது உங்கள் உணவைக் கட்டுப்படுத்துவது முக்கியம். ஆரோக்கியமான உணவை உட்கொள்வது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். உங்கள் நுரையீரலை சுத்தம் செய்ய, குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், வெல்லம், கிரீன் டீ, பூண்டு, இஞ்சி ஆகியவை நநுரையீரலை சுத்தம் செய்யும் திறன் பெற்றவை
அலர்ஜியை தூண்டும் விஷயங்களை தவிர்க்கவும்
நீங்கள் ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், மகரந்தம், தூசி, பூச்சிகள் போன்ற உங்கள் அறிகுறிகளை மோசமாக்கும் தூண்டுதல்களைத் தவிர்க்கவும்.
மேலும் படிக்க | கொல்ஸ்ட்ரால் முதல் உடல் பருமன் வரை... அளவிற்கு அதிக முட்டை பேராபத்து!
வழக்கமான சோதனை செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கு ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாசப் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரைச் சந்தித்து உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இது கோவிட் மற்றும் டெங்குவில் இருந்து மீண்டவர்களுக்கானது.
உங்கள் கார்பன் தடயத்தைக் குறைக்கவும்
வாகனங்களை குறைவாக பயன்படுத்தி, உங்கள் கார்பன் தடயத்தைக் குறைப்பதன் மூலம், அனைவருக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவலாம். அதோடு, பணமும் மிச்சமாகும். உங்கள் சொந்த வாகனத்தை வெளியே எடுப்பதற்குப் பதிலாக நடைபயிற்சி, பைக்கிங் அல்லது கார்பூலிங் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
புகைபிடிப்பதை தவிர்க்கவும்
நீங்கள் சுவாசிக்கும் காற்று மாசுபட்டுள்ள நிலையில், நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், AQI 'மோசமான' பிரிவில் இருக்கும் போது அதைத் தவிர்க்கவும். புகைபிடித்தல் உங்கள் நுரையீரலுக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்தல்
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நுரையீரலை வலுப்படுத்தவும் (Lungs Health), சுவாச செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும். இருப்பினும், AQI மோசமாக இருக்கும் போது திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
காற்றின் தரத்தை கண்காணிக்கவும்
நீங்கள் தங்கியிருக்கும் பகுதியின் காற்றின் தரக் குறியீட்டை (AQI) உன்னிப்பாக தொடர்ந்து கண்காணிக்கவும். AQI அதிகமாக இருந்தால் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
காற்று சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்தவும்
ஒரு நல்ல காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை (Air Purifiers) பயன்படுத்துவது உங்கள் வீட்டிற்குள் இருக்கும் காற்றில் உள்ள மாசுக்களை அகற்ற உதவும். HEPA வடிப்பானுடன் காற்று சுத்திகரிப்பாளரைத் தேர்வு செய்யவும்.
முகமூடிகளை அணியுங்கள்
நீங்கள் வீட்டை விட்டு வெளியேறத் திட்டமிடும் போதெல்லாம், உங்கள் நுரையீரலை மாசுபடுத்தும் பொருட்களிலிருந்து பாதுகாக்க மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். N95 அல்லது N99 மூலம் சான்றளிக்கப்பட்ட முகமூடிகளை வாங்குவதற்கு பணத்தைச் செலவிடுங்கள்.
மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருங்கள்
தேவைப்படும் போது மட்டும் வெளியே வருவதை உறுதி செய்யவும். காற்று மாசு அளவுகள் பொதுவாக காலையிலும் மாலையிலும் அதிகமாக இருக்கும், அதனால்தான் இந்த நாளின் இந்த நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள், நிலைமையை நிர்வகிப்பதற்கான சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. அறிகுறிகள் நீண்ட காலமாக நீடித்தால் அவற்றை புறக்கணிக்காதீர்கள். உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘இன்சுலின் செடி’இலை! பயன்படுத்துவது எப்படி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ