முடிக்கு ஊட்டமளிக்க ஹேர் பேக்குகளைப் பயன்படுத்துகிறோம். ஹேர் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கவனியுங்கள். இதைச் செய்தால் உங்கள் கூந்தலுக்கு நன்மை பயக்கும், அத்துடன் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும். அத்தகைய சூழ்நிலையில், ஹேர் பேக் போடும்போது நீங்கள் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன் இந்த முக்கிய விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
முடி வகைக்கு ஏற்ப ஹேர் பேக்கை தேர்வு செய்யுங்கள்: உங்கள் முடி வகைக்கு ஏற்ப ஹேர் பேக்கை தேர்வு செய்யுங்கள். உங்கள் தலைமுடி மிகவும் எண்ணெய்யாக இருந்தால். கற்றாழை கொண்ட ஹேர் பேக்கை தேர்வு செய்யவும். மறுபுறம், உங்களுக்கு மிகவும் மெல்லிய முடியாக இருந்தால், வெந்தயம் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்ட ஹேர் பேக்கை அப்ளை செய்யவும். இந்த விஷயங்கள் முடியை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவும்.
நுனி முடியில் ஹேர் பேக்கைப் போடுங்கள்: பலர் ஹேர் பேக்கை உச்சந்தலையில் மட்டுமே தடுவ வேண்டும் என்று நினைத்துக்கொள்கின்றனர், ஆனால் அது சரியான முறையில்லை. உங்கள் முடியின் வேர்களுடன், நுனியிலும் ஊட்டச்சத்து தேவை. எனவே ஹேர் பேக்கை உங்கள் தலைமுடியில் மேலிருந்து ஆரம்பித்து கீழ நுனி முடி வரை தடவவும்.
வாரத்திற்கு 1 முதல் 2 முறை ஹேர் பேக் போடுங்கள்: அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஹேர் பேக் போடலாம். ஈரப்பதம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஹேர் பேக்கில் உள்ளன. சேதமடைந்த முடியை சரிசெய்ய ஹேர் பேக் கட்டாயமாகும். நமது உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதே போல் தலைமுடிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை. எனவே குறைந்தது வாரத்திற்கு 1 முதல் 2 முறை ஹேர் பேக் பயன்படுத்தவும்.
முட்டை மற்றும் ஆலிவ் மஞ்சள் கரு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு ஹேர் மாஸ்க் செய்வது மிகவும் எளிது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு முட்டையை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். அதை நன்றாக கலக்கவும், இதோ உங்கள் ஹேர் மாஸ்க் தயார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ