COVID-19 தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்திய Johnson & Johnson.. காரணம் என்ன ..!!!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திங்களன்று (அக்டோபர் 12) அதன் கொரோனா வைரஸ், கோவிட் -19 தடுப்பு மருந்து பரிசோதனையை பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தியதாக அறிவித்தது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2020, 09:10 AM IST
  • ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திங்களன்று (அக்டோபர் 12) அதன் கொரோனா வைரஸ், கோவிட் -19 தடுப்பு மருந்து பரிசோதனையை பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தியதாக அறிவித்தது
  • அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் எடுத்த இந்த முடிவை அடுத்து, 60,000 நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைக்கான ஆன்லைன் சேர்க்கை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
COVID-19 தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்திய Johnson & Johnson.. காரணம் என்ன ..!!! title=

கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வில் பங்கேற்ற ஒருவருக்கு, விவரிக்கப்படாத நோய் ஏற்பட்டதன் காரணமாக, அந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை உட்பட, தங்களது கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான மருத்துவ பரிசோதனைகளில் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளோம் என Johnson & Johnson  நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட பங்கேற்பாளரின் தனியுரிமையை  மதிக்க வேண்டும் என்றும், இந்த பங்கேற்பாளரின் நோயைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம் என்றும், தீவிரமாக ஆராய்ந்த பின் உண்மை நிலை குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாக நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் எடுத்த இந்த முடிவை அடுத்து, 60,000 நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைக்கான ஆன்லைன் சேர்க்கை முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது தனி அதிகாரம் கொண்ட, நோயாளி பாதுகாப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

ALSO READ | கொரோனாவை விரட்ட சோள காட்டு பொம்மை போதுமா.. இது தெரியாம போச்சே..!!!

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) திங்களன்று, கோவிட் -19 தடுப்பூசிக்காக உலகம் காத்திருக்க முடியாது, நம்மிடம் உள்ள, மருந்துகள் கருவிகளைக் கொண்டு உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க செய்ய என்று கூறினார். WHO கிழக்கு மத்தியதரைக் கடலின் பிராந்தியக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றியபோது WHO தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய ​​உலக சுகாதார அமைப்பின் தலைவர் கடந்த நான்கு நாட்களில் பல நகரங்கள் மற்றும் நாடுகளில், பதிவாகும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  இந்த நிலை கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ | COVID தடுப்பூசிக்காக காத்திருக்க முடியாது; ஆனால் உயிர்களை காக்க வேண்டும்: WHO

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News