காப்பீடு செய்தும் பணம் கட்டினால் தான் சிகிச்சையா; மருத்துவமனைகளுக்கு ஆணையம் கடும் எச்சரிக்கை

பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு  செய்துள்ள கோவிட்-19 (COVID-19) நோயாளிகளுக்கு பணமில்லா சிகிச்சை மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 07:51 PM IST
  • மருத்துவ காப்பீடுகள், இரு வகையிலானது.
  • ஒன்றில் நாம் பணம் செலுத்தி விட்டு பின்னர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறுவது.
  • மற்றொன்று, பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவது.இதில் காப்பீட்டு நிறுவனங்கள் நேரிடையாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான பணத்தை செலுத்தும்
காப்பீடு செய்தும் பணம் கட்டினால் தான் சிகிச்சையா; மருத்துவமனைகளுக்கு ஆணையம் கடும் எச்சரிக்கை title=

மருத்துவ காப்பீடுகள், இரு வகையிலானது, ஒன்றில் நாம் பணம் செலுத்தி விட்டு பின்னர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறுவது. மற்றொன்று, பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவது. இதில் காப்பீட்டு நிறுவனங்கள் நேரிடையாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கான பணத்தை செலுத்தும். 

இதில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு  செய்துள்ள கோவிட்-19 (COVID-19) நோயாளிகளுக்கு பணமில்லா சிகிச்சை மறுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman),  இந்திய காப்பீட்டுத் துறை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பேசியதைத் தொடர்ந்து, கோவிட் -19 (Covid-19) சிகிச்சைக்கு, காப்பீட்டின் கீழ், பணமில்லா சிகிச்சை வசதியை வழங்காத  மருத்துவமனைகளுக்கு எதிராக  அடும் நடவடிக்கை நடவடிக்கை  இந்திய காப்பீட்டுத் துறை கட்டுப்பாட்டு ஆணையம் (IRDAI)  மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பணமில்லா சிகிச்சை வசதி அளிக்க மருத்துவமனை மறுத்தால், அது தொடர்பாக https://igms.irda.gov.in என்ற IRDAI வலைதளத்தில், புகார் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. @irdai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் அனுப்பலாம் என மருத்துவ காப்பீடு கட்டுபாட்டு ஆணையம் கூறியுள்ளது.

இது வரை இல்லாத அளவிற்கு, சுகாதார காப்பீட்டிற்கான க்ளைம்கள் வருவதாக கூறியுள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால், பணத்தை உடனடியாக கொடுக்க முடியாத அளவிற்கு, மிக அதிகமாக ஒருவருக்கு 1.5 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை க்ளைம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில், (India)  கொரோனா பரவல் (Corona Virus) இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  1,62 ,63, 695 என்ற அளவில் உள்ளது. 

கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில், இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக இறப்புக்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன.

ALSO READ | வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News