நீங்கள் மூளைக்கு மாஸ்க் போடும் மூடரா? முகத்துக்கு மாஸ்க் போடும் மனிதரா? முக்கிய Mask Tips இதோ

முகக்கவசங்கள், கிருமி நாசினிகள், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கொரோனா தொற்றுக்கு எதிராக நமக்கு மிக முக்கியமான கேடயங்களாக இருப்பவையாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 05:58 PM IST
  • மூக்கு, வாய் மற்றும் கன்னம் ஆகியவற்றை மூடும் வகையில் முகக்கவசத்தை மக்கள் அணிய வேண்டும்.
  • சுத்தமான முகக்கவசத்தை அணிவது முக்கியமாகும்.
  • கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க ஈரமான முகக்கவசம் பயனுள்ளதாக இருக்காது.
நீங்கள் மூளைக்கு மாஸ்க் போடும் மூடரா? முகத்துக்கு மாஸ்க் போடும் மனிதரா? முக்கிய Mask Tips இதோ title=

புதுடெல்லி: இந்தியாவில், மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ஒரு நாள் தொற்றின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி தேவை இல்லாத இடத்தில் நாம் சாதனை படைத்து வருகிறோம். பல மாநிலங்களில் தொற்றின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

மருத்துவ உபகரணங்கள் / வசதிகளுக்கு தடுப்பாடு

ஒருபுறம், தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருகிறது. மறுபுறம் கொரோனா தொற்று (Coronavirus) எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்தியா முழுவதும் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் என பல மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்த இக்கட்டான சூழலில், ஒவ்வொரும் அவரவரை பாதுகாத்துக்கொள்வதுதான் நாம் நமக்கும் நாட்டுக்கும் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

மூளைக்கு மாஸ்க் போட்ட மூடராக இருக்காதீர்கள்!!

முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் (Sanitizer), தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை இந்த தொற்றுக்கு எதிராக நமக்கு மிக முக்கியமான கேடயங்களாக இருப்பவையாகும். ஆனால், சிலர் முகக்கவசங்களை போட்டுக்கொண்டாலும் அதை சரியாக போடுவதில்லை. இதனால், அதைப் போட்டுக்கொண்டும் எந்த பயனும் ஏற்படுவதில்லை. சிலர் மூக்கின் கீழே மாஸ்கை போட்டுக்கொண்டு செல்வதை நாம் பார்க்கிறோம். சிலர் மீண்டும் மீண்டும் ஒரே மாஸ்கை உபயோகிப்பதையும், அடிக்கடி அவற்றை கையால் தொடுவதையும் காண்கிறோம். இப்படி செய்வதற்கு மாஸ்க் போடாமலே கூட இருந்து விடலாம். 

முகக்கவசம் அணியும்போது எப்படி அணிய வேண்டும், எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது என்று இங்கே பார்க்கலாம். 

ALSO READ: கொரோனா சிகிச்சைக்கு “virafin” மருந்தை பயன்படுத்த ஒப்புதல்!

முகக்கவசம் அணிவதில் கவனம் தேவை

முகக்கவசங்களை நாம் அனைவரும் அணிந்தாலும், அவற்றை எப்படி சரியான முறையில் அணிய வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாக, நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம். இதனால், பலர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தொற்றுக்கு ஆளாகிறார்கள். முகக்கவசங்களை அணியும் போது பின்வரும் 5 தவறுகளை கண்டிப்பாக செய்யாதீர்கள். 

மீண்டும் மீண்டும் முகக்கவசத்தை தொடாதீர்கள் 

முகக்கவசத்தை அணிந்தபின்னர், பலர் அதை மீண்டும் மீண்டும் தொடுவதை நாம் அடிக்கடி பார்கிறோம். இது மிகப்பெரிய தவறாகும். முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் நோய்த்தொற்று பரவும் வைரஸ்கள் இருக்கலாம். எனவே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் தொடுவது ஆபத்தை விளைவிக்கும். மேலும், ஒரே முகக்கவசத்தை மீண்டும் மீண்டும் அணிய வேண்டாம்.  ஏனென்றால் நாம் முகக்கவசத்தை அகற்றி கிருமி உள்ள இடத்தில் வைத்தால், அதை மீண்டும் அணிவதன் மூலம், தொற்று மூக்கு மற்றும் வாய் வழியாக உடலில் நுழைய வாய்ப்புள்ளது. 

முகக்கவசத்தை சரியாக அணியவும்

மூக்கை கூட மூடாமல் சிலர் முகக்கவசம் (Facemask) அணிகிறார்கள். இது பெரிய தவறாகும். அமெரிக்காவின் சி.டி.சி (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்) படி, மூக்கு, வாய் மற்றும் கன்னம் ஆகியவற்றை மூடும் வகையில் முகக்கவசத்தை மக்கள் அணிய வேண்டும். முகக்கவசம் முகத்தில் நன்றாக பொருந்த வேண்டும். முகக்கவசத்தை சரியாக அணியாவிட்டால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

முகக்கவசம் அணிவதற்கு முன்னும் பின்னும் கைகளை கழுவ வேண்டாம்

உங்கள் முகக்கவசத்தை தொட்ட பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் கைகளைக் கழுவ வேண்டும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பும், அதை நீக்கிய பின்னும், கைகளை நன்கு சோப்பு நீரில் அல்லது ஒரு சானிட்டீசர் மூலம் சுத்தம் செய்வது மிகவும் முக்கியமாகும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு கைகளைக் கழுவுவது முகக்கவசத்தில் தொற்று வைரஸ் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் முகக்கவசத்தை அகற்றிய பின், உங்கள் கைகளைக் கழுவுவது முகக்கவசத்தில் வைரஸ் இருந்தாலும் அதை நீங்கள் பரப்பாமல் இருப்பதை உறுதி செய்யும். 

முகக்கவசத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டாம்

முகக்கவசத்தை அணிவது மட்டும் போதாது. சுத்தமான முகக்கவசத்தை அணிவது முக்கியமாகும். டிஸ்போசபில் முகக்கவசங்களுக்கு இது தேவையில்லை. ஆனால் நீங்கள் துணியால் ஆன மறுபயன்பாட்டு முகக்கவசத்தைப் பயன்படுத்தினால், அவற்றை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பால்  நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர வைக்க வேண்டும்.  சுத்தம் செய்யாமல் மீண்டும் மீண்டும் முகக்கவசத்தை அணிவது தொற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ஈரமான முகக்கவசத்தை பயன்படுத்தக் கூடாது 

கோடைகாலத்தில் அடிக்கடி வியர்ப்பதால் நீண்ட நேரம் முகக்கவசத்தை அணிவதால் முகக்கவசம் ஈரமாகிவிடும். முகக்கவசம் ஈரமாகிவிட்டால், உடனடியாக அதை மாற்றவும். கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்க ஈரமான முகக்கவசம் பயனுள்ளதாக இருக்காது என்று WHO அறிவுறுத்தியுள்ளது. எனவே முகக்கவசம் ஈரமாகி விட்டால் அதை உடனடியாக மாற்றி விடவும். 

ALSO READ: இது அன்னதானம் அல்ல, ஆக்ஸிஜன் தானம்: மனதை உருக்கும் குருத்வாராவின் தனித்துவமான சேவை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News