உடல் சோர்வு அதிகம் உள்ளதா? இந்த உணவை தவறாமல் சாப்பிடுங்க!

வைட்டமின்-பி12 குறைந்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பது, தொண்டைப்புண் மற்றும் நாக்கு சிவந்து போதல், எரிச்சல், மனசோர்வு, பார்வை கோளாறு, வாய்ப்புண்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.  

Written by - RK Spark | Last Updated : Sep 3, 2022, 12:12 PM IST
  • சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ அல்லாத சில ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது.
  • 5கி ஊட்டச்சத்து ஈஸ்ட்டில் 2.2எம்சிஜி உள்ளது.
  • பாஸ்தா, சாலட், ஸ்மூத்தி போன்றவற்றின் கெட்டித்தன்மைக்கு இது உதவுகிறது.
உடல் சோர்வு அதிகம் உள்ளதா? இந்த உணவை தவறாமல் சாப்பிடுங்க! title=

நமது உடலின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து என்றால் அது வைட்டமின் பி12 தான், இது நமது உடலுக்கு தேவையான ஆற்றல், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் ரத்த சிகப்பணுக்கள் அதிகப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை செய்கிறது.  உடலில் வைட்டமின் பி12 குறைவதை நாம் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம், உதாரணமாக தோல் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பது, தொண்டைப்புண் மற்றும் நாக்கு சிவந்து போதல், எரிச்சல், மனசோர்வு, பார்வை கோளாறு, வாய்ப்புண்கள் போன்றவை.  நமது உடலின் ஆற்றல் மூலமாக விளங்கும் வைட்டமின்-பி12ஐ நாம் தினசரி உணவின் மூலம் பெற வேண்டும், இப்போது அந்த சத்து எந்தெந்த உணவுகளில் அதிகமுள்ளது என்பதை பார்ப்போம்.  

வைட்டமின்பி12 ஆனது மாட்டிறைச்சியில் அதிகளவில் உள்ளது, 190கி ஸ்டீக்கில் 11.2எம்சிஜி கிடைக்கிறது, மாட்டிறைச்சியில் இன்னும் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.  மேலும் இது எலும்பு, தசைகள் மற்றும் செல்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது, இதில் இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளன.  ஈஸ்ட்டில் வைட்டமின்-பி12 அதிகமுள்ளது, சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு அசைவ அல்லாத சில ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது.  5கி ஊட்டச்சத்து ஈஸ்ட்டில் 2.2எம்சிஜி உள்ளது, பாஸ்தா, சாலட், ஸ்மூத்தி போன்றவற்றின் கெட்டித்தன்மைக்கு இது உதவுகிறது.  மேலும் வைட்டமின்-பி12 பாலில் மட்டுமல்லாது பாலாடைக்கட்டி, தயிர், போன்ற பல பால் சம்மந்தப்பட்ட பொருட்களிலிருந்து நமக்கு கிடைக்கிறது.  

மேலும் படிக்க | முகப்பருக்களை உடனே போக்க வேண்டுமா?... இயற்கை வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க

ஒரு கப் முழு கொழுப்பு நிறைந்த பாலில் 1.1எம்சிஜி வைட்டமின்பி12 கிடைக்கிறது.  மேலும் பாலில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.  ஒரு முட்டையில் 1.4எம்சிஜி வைட்டமின்-பி12 உள்ளது, முட்டையில் ப்ரோட்டீன் மட்டுமல்ல அதிகளவில் வைட்டமின்பி12ம் நிறைந்துள்ளது.  தினசரி காலை உணவில் இரண்டு முட்டைகளை எடுத்துக்கொண்டு பயண பெறலாம்.  மீன்களில் 4.15எம்சிஜி வைட்டமின்-பி12, மேலும் இது கிப்பர்ஸ், மத்தி, கானாங்கெளுத்தி, கடற்பாசி போன்ற பல வகையான கடல்வாழ் உயிரினங்களில் வைட்டமின்-பி12 அதிகமாக கிடைக்கிறது.  

தானிய வகைகளில் அதிகளவு வைட்டமின்-பி12 கிடைக்கிறது, 1 கப் தானியம் கிட்டத்தட்ட 14 வாரங்களில் ஒருவரது உடலில் வைட்டமின்-பி12 சத்தை அதிகரிக்கிறது.  மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற இறைச்சிகளில் வைட்டமின்-பி12 அதிகம் நிறைந்துள்ளது, ஆட்டின் 3.5 அவுன்ஸ் கல்லீரலில், 85.7எம்சிஜி வைட்டமின்-பி12 கிடைக்கிறது.  மேலும் இதிலுள்ள வைட்டமின்-ஏ கண்பார்வையை மேப்படுத்துகிறது.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News