40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க ‘இவற்றை’ உணவில் சேர்க்கவும்!

நிச்சயமாக, முதுமையை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் முதுமையின் அறிகுறிகளை கண்டிப்பாகத் தடுக்கலாம். குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்வது உங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2023, 11:01 PM IST
40+ வயதாவிட்டதா... என்றும் இளமையாக இருக்க ‘இவற்றை’ உணவில் சேர்க்கவும்! title=

முதுமை என்பது எவராலும் தடுக்க முடியாத இயற்கையான செயலாகும். 40 மற்றும் 50 களில் கூட, வெளிப்படையாக, முதுமையின் அறிகுறிகள் பெரும்பாலானோரின் முகத்திலும் சருமத்திலும் தோன்றத் தொடங்குகின்றன. தோலில் சுருக்கங்கள், தலைமுடி நரைத்தல், மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுதல், பார்வைக் குறைபாடு ஆகிய அனைத்தும் இந்த வயதில் தோன்றத் தொடங்கும் அறிகுறிகள். இன்றைய உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் முன்கூட்டிய முதுமையின் அறிகுறிகளுக்கு ஆளாகிறார்கள்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 40 வயதிற்குப் பிறகு, உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறையத் தொடங்குகிறது மற்றும் முதுமையின் தாக்கம் மெதுவாகத்  வெளிப்படத் தொடங்குகிறது. இது மட்டுமின்றி, இந்த வயதிற்குப் பிறகு, இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ், இரத்த சோகை, தைராய்டு போன்ற தீவிர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. 

முதுமையின் அறிகுறிகள் முன்கூட்டியே வருவதைத் தடுக்கவும், எந்த வயதிலும் இளமையாகத் தோன்றவும் விரும்பினால், உங்கள் உணவில் சில முதுமை எதிர்ப்பு உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சில உணவுகளை எடுத்துக் கொண்டாக் முதுமையை தடுக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்

பப்பாளி

பப்பாளியில் பப்பைன் என்ற நொதி உள்ளது, இது வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது. இந்த பழத்தில் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது வயதான செயல்முறையை மெதுவாக்கும் சக்தி கொண்டது. பப்பாளி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் சேரும் கொழுப்பை எரித்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் தடுக்கிறது. 

மாதுளை

மாதுளையில் புனிகலஜின்ஸ் என்ற கலவை உள்ளது, இது தோலில் கொலாஜனை அதிகரிக்கிறது மற்றும் வயதான அறிகுறிகளை மெதுவாக்கும். தினமும் மாதுளம் பழச்சாறு அருந்தலாம். தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே சக்தியினை பெறுவதால், மூளை சுறுசுறுப்பாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

தயிர்

தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன, இது உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை அழகாகவும் வலுவாகவும் மாற்றும். ரிபோஃப்ளேவின் அல்லது வைட்டமின் பி12 நிறைந்த தயிர் சருமத்தை பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும். தயிரில் புரதம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற வைட்டமின்களுடன் நிறைந்துள்ளது. இது கால்சியம், ஜிங்க், சோடியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களாலும் நிறைந்துள்ளது.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படும் குளோரோபில், சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரித்து, முகத்தில் வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது. சிறந்த சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இவற்றில் காணப்படுகின்றன. அதிலும் கீரைகளில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை என்னும் அளவுக்கு அற்புதமான நன்மைகளை இது கொண்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குணங்கள் கீரைகளில் உள்ளன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மை அளிக்க கூடிய கீரைகள் குறித்து ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

தக்காளி

தக்காளியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது, இது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது தவிர, தக்காளி வைட்டமின் சியின் சிறந்த மூலமாகும், இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை 15 நாட்களில் கரைக்கும் ‘கடுக்காய்’! பயன்படுத்தும் சரியான முறை!

கால்சியம் 

வயதாகும்போது, ​​​​உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால்,  எலும்புகளை பலவீனமாகும். எனவே, வைட்டமின் டி உடன் கால்சியம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியது அவசியம். கால்சியத்தின் நல்ல ஆதாரங்களில் பால், தயிர், சியா விதைகள், பாலாடைக்கட்டி, ப்ரோக்கோலி, பாதாம், போன்றவை அடங்கும்.

ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகள்

ஃப்ரீ ரேடிக்கல்கள் திசுக்களின் வயதை அதிகரிக்கச் செய்கின்றன. மேலும் அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் அகற்றுவதற்கும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். இதற்கு க்ரீன் டீ, ப்ளாக் டீ, காபி போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் எடுத்துக் கொள்ளலாம். இவை தவிர கருப்பு அரிசியையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News