15 நாட்களில் தொப்பை கரைய இந்த மேஜிக் பானம் குடிச்சா போதும்.. ஈசியா குறைக்கலாம்

Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளிலும் நம் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2023, 07:06 AM IST
  • வெந்தயம் மற்றும் சோம்பு நீரின் நன்மைகள்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
15 நாட்களில் தொப்பை கரைய இந்த மேஜிக் பானம் குடிச்சா போதும்.. ஈசியா குறைக்கலாம் title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பலரை வாட்டி வதைக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இதனால் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்ககும் மோசமான வாழ்க்கை முறையும் உடல் எடை அதிகரிப்பிற்கு பெரும் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுவது, எப்போது வேண்டுமானாலும் தூங்குவது, என எந்த ஒரு முறையும் இல்லாமல் வாழ்க்கை வாழ்வதால், பல முறை பலருக்கு எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. மோசமான வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் பல நோய்களுக்கும் ஆளாகிறார்கள். அதுமட்டுமின்றி உடலில் உப்பசமும் ஏற்படுகின்றது. 

எடை அதிகரிப்பு மற்றும் தொங்கும் கொழுப்பு ஆகிய பிரச்சனைகளால் பலர் அவதியில் உள்ளனர். உடல் ஆரோக்கியமாக இருந்தும் அவர்களின் எடை குறைவதில்லை. சில சமயம் டயட்டை மாற்றினாலும் பெரிய பலன் இருக்காது. சிலர் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய கூட தயாராக உள்ளனர். தொங்கும் தொப்பை (Belly Fat) ஒருவரது ஆளுமையை மோசமாக்குகிறது. சிலர் ஜிம் சென்று அங்கு பல மணி நேரங்களை செலவிடுகிறார்கள். ஆனால் சில சமயங்களில் இவை அன்னைத்தும் பயனளிக்காமல் போய்விடுகின்றன. சில எளிய, இயற்கையான வழிகளிலும் நம் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

தினமும் காலையில் வெந்தயம் மற்றும் சோம்பு நீரை குடித்தால் எளிதாக எடையை குறைக்கலாம். இந்த இரண்டு மசாலாப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் தண்ணீர் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அது தொடர்பான பலன்கள் மற்றும் இந்த நீரை தயாரிக்கும் முறை பற்றி இங்கே காணலாம். 

உடல் எடையை குறைக்கும் பானம் (Drink For Weight Loss) 

- முதலில் 1 டீஸ்பூன் சோம்பு (Fennel) மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

- காலையில் எழுந்ததும் பெருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். இப்போது நீங்கள் மீதமுள்ள தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.

- இந்த தண்ணீர் கசப்பாக இருந்தால், அதில் தேன் சேர்க்கலாம்.

- தண்ணீர் குடித்த பிறகு, இந்த ஊறவைத்த விதைகளை மென்று சாப்பிடலாம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

வெந்தயம் மற்றும் சோம்பு நீரின் நன்மைகள்

நச்சு நீக்கி

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு மற்றும் வெந்தயம் (Fenugreek) தண்ணீர் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மை (Detox) நீங்கும். உடலில் இருந்து அனைத்து வகையான கழிவுகளும் படிப்படியாக வெளியேறும். ஆனால் இந்த தண்ணீரை 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்து குடிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! உடல் பருமனால் ஏற்படும் ‘5’ ஆபத்தான நோய்கள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வெந்தயம் மற்றும் சோம்பு இரண்டிலும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும். வெந்தயம் மற்றும் சீரக தண்ணீர் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

செரிமான அமைப்பு

வெந்தயம் மற்றும் சோம்பு தண்ணீர் செரிமான அமைப்புக்கு ஒரு சஞ்சீவியாக இருக்கும். இது வயிற்றை சுத்தமாக வைத்து, செரிமான செயல்முறையை (Digestion) எளிதாக்குகிறது. இதை குடிப்பதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்

வெந்தயம் மற்றும் சோம்பு தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம் (Weight Loss). இது எடை இழப்பு செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறது. சிறந்த பலன் கிடைக்க, அதன் விதைகளையும் மென்று சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பலூன் போல இருக்கும் உடலை பூபோல ஆக்கணுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News