Kitchen Hacks: வாழைப்பழத்தை நீண்ட நேரம் பிரெஷ்ஷாக(Fresh Banana) வைத்திருப்பது எப்படி? என்பதை பலரும் நீண்ட காலமாக தேடி வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பழுத்த வாழைப் பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியாது. ஆனால், ஒருசில ஸ்மார்ட்டான டிப்ஸ்களைப் பயன்படுத்தினால், வாழைப்பழத்தை இன்னும் கொஞ்ச நாட்கள் பிரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.
ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்கும் வாழைப்பழங்களை தினம்தோறும் காலை மாலை சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடலாம். ஒரு சிலருக்கும் வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். அதனால், ஒரு நாளைக்கு நான்கு பழங்களுக்கு மேல் கூட சாப்பிடுபவர்கள் உள்ளனர். இன்னும் சிலர் மார்க்கெட்டில் வாங்கி வந்த பழத்தை சரியாக சாப்பிட்டு, பத்திரமாக அடுத்தடுத்த நாட்களுக்கு வைத்திருப்பார்கள்.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக் டிரிங்க்’; தயாரிப்பது எப்படி
அந்த பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க 5 வகையான டிப்ஸ்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு வாழைப்பழங்கள் அழுகாமல் இருக்க வேண்டும் என்றால், சந்தையில் இருந்து ஹேங்கர்களை வாங்கி வாருங்கள். அதில் வாழைப்பழங்களை தொங்கவிட வேண்டும். இப்படி வைத்துக்கொண்டால் வாழைப்பழம் அழுகுவதை தடுத்து கொஞ்ச நாட்களுக்கு புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம். பொதுவாக உணவை ஃப்ரெஷ்ஷாக வைக்க ஃப்ரிட்ஜை பயன்படுத்துகிறோம். சிலர் வாழைப்பழத்தைக் கூட பிரிட்ஜில் வைக்கின்றனர். ஆனால், அப்படிச் செய்யவே வேண்டாம். சாதாரண அறை வெப்பநிலையிலேயே வைக்க வேண்டும்.
மற்றொரு வழி என்னவென்றால், வாழைப்பழத்தை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க மெழுகு காகிதத்தைப் பயன்படுத்தலாம். அந்த காகிதத்தைக் கொண்டு வாழைப்பழத்தை மெழுகு காகிதத்தால் மூடி வைக்க வேண்டும். வாழைப்பழம் நீண்ட நேரம் அழுகாமல் இருக்க அதன் தண்டைச் சுற்றி பிளாஸ்டிக் அல்லது செல்லோ டேப்பைக் கட்டி வைக்க வேண்டும். இதன் மூலம் வாழைப்பழத்தை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். வைட்டமின் சி மாத்திரைகள் வாழைப்பழங்களை புதியதாக வைத்திருக்க ஒரு சிறந்த மற்றும் அறிவியல் வழி. இதற்கு, மாத்திரையை தண்ணீரில் கலந்து, வாழைப்பழத்தை அதில் ஊற வைக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு Zee News Tamil பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ