இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பல விதமான மசாலாப் பொருட்களில் ஒன்று சீரகம். சீரகம் என்பது உணவில் தவிர்க்க முடியாத ஒரு மசாலா ஆகும். ரசம் என்றாலே நமக்கு ஞாயாபகம் வருவது சீரகம் தான். இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் எடை குறையும். இப்போது பெரும்பாலான உணவுப் பொருட்களில் நிறைய கலப்படம் செய்யப்படுகிறது. சீரகத்தில் நிறைய கலப்படம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உண்மையான மற்றும் போலி சீரகத்தை நீங்கள் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சந்தையில் சில இடங்களில் விற்கப்படும் சீரகம் உண்மையானது அல்லது. இது ஒரு வகைபுல் மூலம் கிடைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. இது உண்மையான சீரகம் போல் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், சீரகம் வாங்கும் போது, சீரகம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
போலி சீரகம் எப்படி செய்யப்படுகிறது
- ஆறுகளின் கரையில் வளரும் காட்டு புற்களிலிருந்து இவை தயாரிக்கப்படுகின்றன, மேலும் இந்த புற்களைப் பயன்படுத்தி கருப்பு சீரகமும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உண்மையில், இந்த புற்கள் சீரகம் போலவே பார்ப்பதற்கு தோன்றும்.
- இதை தயாரிக்க, ஆறுகளின் கரையில் வளரும் புல் போன்ற களைகளின் இலைகள் வெல்ல நீரில் ஊறவைக்கப்படுகின்றன.
- உலர்த்திய பின் அது சீரகம் போல தோற்றமளிக்கும்.
- பின்னர் இதில் ஒரு வகை தூள் கலக்கப்படுகிறது.
இதற்குப் பிறகு, அது ஒரு சல்லடையில் போட்டு சலிக்கப்படுகிறது.
ALSO READ | என்ன செஞ்சாலும் எடை குறையலையா... 7 நாளில் எடையை குறைக்க Military Diet ட்ரை பண்ணுங்க..!!
உண்மையான மற்றும் போலி சீரகத்தை எவ்வாறு அடையாளம் காண்பது
போலி சீரகத்தை அடையாளம் காண, முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் சீரகத்தை சேர்க்கவும். சீரகத்தில் உள்ள நிறம் கரைய ஆரம்பிக்கும். மேலும் அதை தண்ணீரில் போட்டப் பிறகு உடைக்க முடிந்தால், அந்த சீரகம் போலியானது.
- உண்மையான மற்றும் போலி சீரகத்தை அதன் மணம் கொண்டும் அடையாளம் காணலாம். உண்மையான சீரகத்திற்கு மணம் இருக்கிறது, போலி சீரகத்திற்கு மணம் இல்லை.
ALSO READ | நீங்கள் வாங்குவது அசல் இஞ்சி தானா,போலியா என அறிந்து கொள்வது எப்படி..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR