PCOS Remedies: பிசிஓஎஸ்-ல் இருந்து விடுதலை பெறுவது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்!

PCOS Remedies: பல பெண்கள், பிசிஓஎஸ் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?   

Written by - Yuvashree | Last Updated : Feb 16, 2024, 06:30 PM IST
  • உலகில் 7 % பெண்கள் பிசிஓஎஸ் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
  • இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி?
  • இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்னென்ன?
PCOS Remedies: பிசிஓஎஸ்-ல் இருந்து விடுதலை பெறுவது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்! title=

PCOS Remedies And Treatment:  Polycystic Ovary Syndrome என்பதை PCOS என்று கூறுவர். சரியாக மாதவிடாய் வராதவர்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை பாதிப்பை உருவாக்கும். இது, கருப்பையில் வளரும் கட்டிகளால் இந்த பிரச்சனைகள் உருவாகின்றன. பெண்களுக்குள் இருக்கும் ஹார்மோன் பிரச்சனைகளால் இந்த பிசிஓஎஸ் பிரச்சனை உருவாகின்றன. உலகளவில் 7 சதவிகிதம் பெண்கள், இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

PCOS பிரச்சனையில் இருந்து விடுபட வழி என்ன? 

PCOS பிரச்சனைகளை சமாளிப்பதற்கு சில மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஆனால், இந்த பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக மீள்வதற்கு வழிகள் இல்லை என்றாலும், இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுடபலாம். இதற்கு வாழ்வியல் முறைகளையும் பெரிய அளவில் மாற்ற வேண்டியதும் உள்ளது. 
PCOS ஏற்படுவதற்கான காரணம்:

>ஆண் ஹார்மோன்கள்:

ஆண்களுக்குள் பெண்களுக்குரிய ஹார்மோன்களும், பெண்களுக்குள் ஆண்களுக்குரிய ஹார்மோன்களும் இருக்கும். பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் அதிகமாக இருக்குமாம். இதனால் முகத்தில் முடி வளர்தல், முகப்பருக்கள், முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் ஆகியவை ஏற்படும். 

>உடல் எடை அதிகரிப்பு:
உடல் எடைக்கும் பிசிஓஸ்-ற்கும் அதிக தொடர்பு உள்ளது. உடல் எடை அதிகரித்துள்ளதால் இந்த பிரச்சனை வருகிறதா, இந்த பிரச்சனையால் உடல் எடை அதிகரிக்கிறதா என்பது இன்றளவும் பதில் அற்ற கேள்வியாக இருக்கிறது. ஆனால், பிசிஓஎஸ் பாதிப்புகளோடு இருப்பவர்கள், கண்டிப்பாக உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக உள்ளது.

மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!

>குடும்பத்தின் மருத்துவ வரலாறு:

அம்மாக்களுக்கு அல்லது பாட்டிக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் அது அவர்களின் ரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. 

PCOS போக்குவதற்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்:

பிசிஓஎஸ் பிரச்சனையை போக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

>அதிமதுரம்:

அதிமதுரம் என்ற மூலிகையில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன. இது, ஆண்களின் ஹார்மோன்கள் அதிகம் இருக்கும் பெண்களுக்கு, மாதவிடாய் சுரப்பதற்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இதனை, சுடு தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம். 

>ஆளி விதைகள்:

ஆளி விதைகள், ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை சுரக்க வைக்க உதவும். இது, பிசிஓஎஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு அந்தஹார்மோன்கள் சுரப்பதை குறைக்கும், இதனால் முகத்தில் தேவையற்று வளரும் முடியையும் வளர முடியாமல் தவிர்க்கலாம். 

>இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை, இன்சுலின் ஏற்பிகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை டீயுடன் கலந்தோ, தண்ணீருடன் கலந்தோ குடிக்கலாம். இருப்பினும், ஒவ்வொருவரின் உடலமைப்பும் ஒவ்வொரு மாதிரியும் இருக்கும். எனவே மருத்துவர்களிடம் பரிந்துரைக்கு பிறகு, இதனை உட்கொள்ளலாம். 

மேலும் படிக்க | Belly Fat: தொங்கும் தாெப்பையை சீக்கிரமாக குறைக்கலாம்! ‘இந்த’ யோகாசனங்களை செய்தால் போதும்..

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News