தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது நாம் தினசரி அனுபவித்து வரும் ஒன்றாகும். இந்த முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கூடும். அதில் ஒன்று பொடுகால் கூட ஏற்படலாம். பொடுகு தொல்லை தரும் மிகப் பெரும் பிரச்சனை.
இதோ உங்களுக்காக பொடுகைப் போக்க சில எளிமையான டிப்ஸ்:-
> பொடுகு தொல்லையை அதிகரிக்கும் இரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இயற்கை வைத்தியம் மேற்கொள்வது மிக நல்லது.
> தலையில் புண் அல்லது வெட்டுக்காயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன் படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
> தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் தீரும்.
> தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு பெருகுவதை தடுக்கும்.
> பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
> அருகம்புல் சாறு எடுத்து, தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி, அப்புறம் ஆற வைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.