அதிக அளவில் வைட்டமின் ஏ உட்கொள்வது தோல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma) போன்ற தோல் புற்றுநோயைத் தடுப்பது கடினம் என்று கருதப்பட்டு வந்தது.  ஆனால் , வைட்டமின் ஏ நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன், சன்ஸ்கிரீன்  க்ரீம்களை உபயோகிப்பதாலும்,  கடுமையான சூரிய ஒளியில் செல்வதை தவிர்ப்பதன் மூலமும் தோல் புற்று நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க முடியும், என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன.

Last Updated : May 28, 2020, 12:55 PM IST
அதிக அளவில் வைட்டமின் ஏ உட்கொள்வது தோல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் title=

நியூயார்க்: வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டவர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 17 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் வைட்டமின் ஏ வை மிதமாகவும், கூடுதல் உணவு பொருள் வடிவில் வைட்டமின் ஏ வை (supplements rich in Vitamin A.) எடுத்துக் கொண்டவர்களை விட நேரடி உணவாக வைட்டமின் ஏ வை  உட்க்கொண்டவர்களுக்கே பாதுகாப்பு அதிகமாக உள்ளது.

"ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கான  மற்றொரு காரணத்தையும் இந்த ஆய்வு வழங்குகிறது. ஸ்குவாமஸ் செல் கார்சினோமா உள்ளிட்ட தோல் புற்றுநோயைத் தடுப்பது கடினம், ஆனால் இந்த ஆய்வு வைட்டமின் ஏ நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதுடன், சன்ஸ்கிரீன் கிரீம்களை  உபயோகிப்பது, மற்றும் கடும் சூரிய ஒளியில் செல்வதை குறைத்துக் கொள்வது  தோல் புற்று நோய் ஆபத்தை  குறைப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம் "என்று பிரவுன் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் யூன்யோங் சோ கூறியுள்ளார்.

வைட்டமின் ஏ தோல் செல்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் இன்றியமையாதது என்று அறியப்படுகிறது, ஆனால் தோல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதில் அதன் செயல்திறன் குறித்த முந்தைய ஆய்வுகள் கலவையான முடிவுகளையே தந்துள்ளன. .

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில்   ஆராய்ச்சியாளர்கள் இரண்டு நீண்டகால கண்காணிப்பு ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், இதில் 1984 முதல் 2012 வரை 121,700 அமெரிக்க பெண்கள் மற்றும் 1986 முதல் 2012 வரை 51,529 அமெரிக்க ஆண்கள்  தொடர்ந்து   பின்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டனர்.  

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின்  உணவு பழக்க வழக்கம்,  மற்றும் தோல் புற்றுநோய்  ஏற்படும் சாத்தியக்கூறு  பற்றிய  முடிவுகளை ஆராய்ச்சி குழு தொடர்ந்து  கவனித்தது.  இரண்டு ஆய்வுகளுக்கும் இடையில், சுமார் 1,23,000 பங்கேற்பாளர்கள் வெள்ளையர்களாக இருந்தனர் (இவர்க்ளுக்கு  தோல் புற்றுநோய உருவாகும்  ஆபத்து  குறிப்பிடத்தக்க அளவில்  இருந்து  வருகிறது ), புற்றுநோய்க்கு முந்தைய வரலாறு எதுவும் மற்றும் ,  உணவு  பழக்க வழக்க தரவுகள்  எடுக்கப்பட்டன. . . 24 முதல் 26 ஆண்டு தொடர் ந்து  கண்காணிக்கப்பட்ட  பின்னர்    அந்த 1,23, 000 பேரில்  3,978  பேருக்கு தோல் புற்று நோய்  ஏற்பட்டது கண்டுபிடிக்க பட்டது.

பங்கேற்பாளர்களின் தலைமுடி நிறம், அவர்களின் வாழ்நாளில் அவர்கள்  கடும்  வெயிலில் சென்ற நேரத்தின் அளவுகள் , எண்ணிக்கை மற்றும் தோல் புற்றுநோய தொடர்பான  குடும்ப வரலாறும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன . பங்கேற்பாளர்களை அவர்களின் வைட்டமின் ஏ உட்கொள்ளல் அளவின் அடிப்படையில் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்  பட்டனர்.  எவர் எல்லாம்   சாதாரணமாகவே  தினசரி  அதிகமான அளவில்  வைட்டமின் ஏ- வை  உட்கொண்டனரோ அவர்களுக்கு  தோல் புற்றுநோய்  ஏற்படுவதற்கான  வாய்ப்பு 17 சதவீதம் குறைவாக இருப்பதை  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, வைட்டமின் ஏ, பெரும்பாலும் உணவுகள் மூலமாகவே, குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து, மற்றும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட உணவுகள் அல்லது வைட்டமின் சப்ளிமெண்ட்ஸிலிருந்து வந்தவை என்பதையும் இந்தக் குழு கண்டறிந்தது.

(மொழியாக்கம் -வானதி கிரிராஜ்)

Trending News