இன்றைய வேகமான உலகில் வயதில் பெரியவர்கள் மட்டுமல்லாது வயதில் சிறிய குழந்தைகளும் கொலஸ்ட்ரால் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். முன்னர் இருந்தது போல இப்போதுள்ள குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை, செல்போன் மற்றும் டிவிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதுபோன்ற உட்கார்ந்த வாழ்க்கை மற்றும் அதிகப்படியான நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் இன்றைய கால குழந்தைகள் இளம் வயதிலேயே அதிக கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது இரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக்கை உருவாக்க காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதயத்தின் ஆரோக்கியம் மோசமடைகிறது.
மேலும் படிக்க | உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? இரத்த ஓட்டத்தில் கோளாறு, ஜாக்கிரதை
உடல் பருமன், ஜீன், மோசமான உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடலில் கொலஸ்டராலின் எண்ணிக்கை அதிகரித்து விடுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதால் நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர்கள், பிரஞ்சு ப்ரைஸ் மற்றும் சிப்ஸ் போன்ற எண்ணெயில் வறுத்து பொறித்த உணவு வகைகளை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். இதுதவிர இனிப்பு சுவை அதிகம் நிறைந்த பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
பேஸ்ட்ரிகள், மிட்டாய்கள் மற்றும் கேக் போன்ற இனிப்புப் பொருட்களை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவற்றில் நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். குழந்தைகளுக்கு கொலஸ்டராலின் அளவை குறைக்க அவர்களை உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். தினமும் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனையை நீங்கள் இப்படியும் தவிர்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ