பூண்டை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது? வறுத்தா இல்லை பச்சையாகவா?

Healthy Life VS Garlic: பூண்டின் நன்மைகளுடன் வேறு எந்த உணவுப் பொருளுமே போட்டி போட முடியாது! சமைத்தாலும், பச்சையாக சாப்பிட்டாலும் வறுத்து சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது பூண்டு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2023, 03:35 PM IST
  • ஆரோக்கிய நலன்களை அள்ளித் தரும் பூண்டு
  • பூண்டுடன் வேறு எந்த மசாலாவாது போட்டி போட முடியுமா?
  • ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதுகாவலன் பூண்டு
பூண்டை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது? வறுத்தா இல்லை பச்சையாகவா? title=

நமது அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து பூண்டை பயன்படுத்தி வந்தால், பலவித நன்மைகளை பெறலாம். பெண்களுக்கு தாய்ப்பால் விருத்தி, உடல் சக்தியை அதிகரிப்பது, வியர்வை பெருக்கம் உள்ளிட்ட ஆரோக்கியங்களை கொடுக்கும் பூண்டு, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் நன்மைகள் மேலும் அதிகமாக கிடைக்கும். உடல் எடை குறைக்க உதவும் பூண்டு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் உள்ள அல்லில் சல்பைடு என்ற வேதிப்பொருள் புற்றுநோய் எதிர்ப்பியாக செயல்படுகிறது.  

பூண்டின் ஆரோக்கிய நன்மைகளை சொல்லி மாளாது. ஆண் பெண் இரு பாலருக்கும் தனிப்பட்ட ஆரோக்கிய பலன்களை கொடுக்கும் பூண்டு, பொதுவாகவே அனைவருக்கும் சுவாச தடை, வாயுத்தொல்லையை போக்கும். அதோடு, செரிமாண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்தக் கொதிப்பை தணிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும் பண்பு கொண்ட பூண்டு, உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!
 
பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.  பச்சை பூண்டு, வாயுத்தொல்லையை கட்டுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும்  பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. 

நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும் பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் பிற கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

பூண்டு விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது. பூண்டு தொடர்பாக பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன, அதில் சோர்வைக் குறைத்து ஸ்டாமினாவை அதிகரிக்கிறது பூண்டு என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 30 வயதிற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

நாளோன்று பச்சையாக ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டுகளை மட்டுமே பச்சையாக சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஆனால், உணவில் சமைத்து சாப்பிடும்போது அதிகமாக உண்டாலும் தவறில்லை.

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் ஒரு புறம் என்றால், அது உணவின் சுவையையும், மணத்தையும் கூட்டுகிறது. அதிலும் அசைவ உணவில் பூண்டு சேர்க்காமல் சமைத்தால் ருசியே இருக்காது.

பூண்டை வறுத்து உண்பது உடல் கோளாறுகளை நீக்கும். இப்படி வறுத்து சாப்பிடும் பூண்டு, குடலை ஒழுங்குபடுத்தி செரிமானத்தை சுலபமாக்குகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு வறுத்த பூண்டு உதவுகிறது. அதேபோல, பூண்டை தட்டி நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, அதை உணவுகளில் பயன்படுத்துவதும் ஆரொக்கியத்தை மேம்படுத்தும்.  

பச்சையாகவோ அல்லது சமைத்தோ மட்டுமல்ல, பூண்டை வேறு விதங்களிலும் பயன்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் பழம்! மூளை மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் லிச்சி ஜூஸ்

பூண்டியின் ஆரோக்கிய நன்மைகள்

பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது 
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது பூண்டு 
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பூண்டு உதவுகிறது 
பூண்டு புற்றுநோயைத் தடுக்க உதவும் 
பூண்டுக்கு ஆன்டிபயாடிக் பண்புகள் உண்டு 
பூண்டு அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவை தடுக்கும் 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏய் நீ அழகா இருக்கே! கத்தரிக்கா சாப்பிட்டா இப்படி பாராட்டு கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News