உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அதற்கு கண்டிப்பாக இந்த டயட்டை கடைபிடியுங்கள்

உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவோர் இந்த டயட்டை பின்தொடருங்கள். 

Written by - Yuvashree | Last Updated : May 2, 2023, 01:57 PM IST
  • உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்.
  • தானிய வகைகள் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கிறது.
  • சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது.
உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அதற்கு கண்டிப்பாக இந்த டயட்டை கடைபிடியுங்கள் title=

உடல் பருமன், அதிக உடல் எடை இவை அனைத்தும் கடைசியில் மனிதனை பிரச்சனையில்தான் கொண்டுபோய் விடும். நவீன கால உலகில் நம்மில் பலர் துரித உணவுகளை அதிகம் சாப்பிட்டு, காலத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால், அடிக்கடி மருத்துவமனைக்கு மொய் எழுத வேண்டியதாக இருக்கிறது. கொஞ்சம் மெனக்கெட்டால் நம்மாலும் நோய் நொடியற்ற வாழ்வை வாழ முடியும். அதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஹெல்தியான வாழ்க்கை முறைகளை பின்தொடர வேண்டும். சரி, அப்படி ஆரோக்கியமான உணவு டையட்டை எப்படி கடைப்பிடிப்பது? வாங்க பார்க்கலாம். 

 

அதிகமாக காய்கறி-பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்:

 

நமது தினசரி உணவுகளில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வது உடலில் உள்ள வைட்டமின்களை அதிகரிக்கும். உடலில் உள்ள கழிவுகளை சுத்தமாக அகற்றவும் காய்கறி மற்றும் பழங்கள் உதவுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தவும் காய்கறி மற்றும் பழ டயட்டை நாம் பின்தொடரலாம். 

 

தானிய வகை உணவுகள்:

அதிக தானிய வகைகளை எடுத்துக்கொள்வதும் நம் உடல் நலத்தை காப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது. உடல் எடையை குறைக்க கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். ஆனால், இவற்றையும் உங்கள் உடலுக்கு ஏற்றவாறு குறைவான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கோதுமையும் உடல் எடையை குறைக்க உதவும். இரவில் 1 அல்லது 2 கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது மிகப்பெரிய நண்மை பயக்கும்.

சர்க்கரை-உப்பின் அளவை குறையுங்கள்:

உடல் எடையை கண்டிப்பாக குறைக்க விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். கடையில் விற்கும் உணவுகள் மற்றும் பையில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் அதிகளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. அது மட்டுமின்றி, சுவைக்காக பல ரசாயனங்கள் அதில் சேர்க்ப்படுவதுண்டு. ஒரு மாதத்திற்கு கடையில் விற்கும் உணவுகளை சாப்பிடாமல் இருந்து பாருங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கே தெரியும். 

மேலும் படிக்க | பூண்டுக்குள் பூகம்பம்: பூண்டு அதிகமானால் ஆபத்துங்க.... ஜாகிரதை!!

 

 

நிறைய தண்ணீர் அருந்துங்கள்:

 

வெயில் காலத்தில் நம்மில் பாதி பேர் குளிர் சாதன வசதி நிரம்பிய அரையிலேயே பொழுதை கழிக்கிறோம். இதனால் தண்ணீர் தாகம் ஏற்படுவது குறைந்த போய்விடும். ஆனால், நம் உடலுக்கு ஏற்ற அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ஆரோக்கிய டையட்டில் தண்ணீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. டையட்டை பின்தொடர்பவர்கள் தினமும் 8 டம்ளர் நீர் அருந்தவேண்டுமாம். 

 

ஆரோக்கிய கொழுப்பு உணவுகள்:

 

எண்ணெய் மற்றும் துரித உணவுகளால் உடலில் உண்டாகும் கொழுப்பு என்றுமே ஆபத்துதான். அதனால் அவகாடோ, பாதாம் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். 

 

சாப்பிடும்போது கவனம் அவசியம்:

ஒரு இடத்தில் அமர்ந்து உணவு சாப்பிடும் போது நம்மில் பலர் செல்போன்களையும் டிவியையும் பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால், இந்த பழக்கத்தை அறவே விட்டுவிட வேண்டும் என பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி கவனச்சிதறல்களுடன் சாப்பிடுபவர்கள்தான் உடல் பருமனால் அவதிப்படுபவர்களாக உள்ளனர் என சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆரோக்கிய டையட்டின் முக்கியத்துவம்:

 

ஆரோக்கியமான உணவுகளை உட்காெள்வதால், நமது உடல் மட்டுமன்றி மனதும் வலிமை பெரும். தசை மற்றும் எலும்புகள் வலிபெறுவதற்கும் ஆரோக்கிய உணவுகள் உதவும். அதிக கொழுப்புச்சத்து இல்லாத உணவுகள், புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள்தான் ஆரோக்கிய உணவு பட்டியலில் அடங்கும். குறிப்பாக உங்கள் டையட்டில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது. 

 
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News