Health News: அத்திப்பழமும் அதிகமானால் ஆபத்துதான், விவரம் இதோ!!

அத்திப்பழம் மிகவும் சுவையான, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழமாகும். இதில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன என்பதற்கு அத்திப்பழமும் ஒரு நல்ல உதாரணமாகும்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 06:41 PM IST
  • அத்திப்பழத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில பண்புகள் உள்ளன.
  • அத்திப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவது உங்கள் கல்லீரலிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • அதிக அத்திப்பழங்களை சாப்பிடுவது கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும்.
 Health News: அத்திப்பழமும் அதிகமானால் ஆபத்துதான், விவரம் இதோ!! title=

அத்திப்பழம் நம் உடலுக்கு அதிகப்படியான நலன்களை அளிக்கும் பழமாகும். இது பெரும்பாலும் உலர்பழ வடிவில் உட்கொள்ளப்படுகின்றது. 

அத்திப்பழம் மிகவும் சுவையான, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழமாகும். இதில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன என்பதற்கு அத்திப்பழமும் ஒரு நல்ல உதாரணமாகும். 

ஆம்!! அத்திப்பழத்திலும் (Fig) உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில பண்புகள் உள்ளன. அத்திப்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதால் சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே அளவுக்கு மிஞ்சாமல் அத்திப்பழத்தை உட்கொள்வது நல்லது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிட்டால், பல வயிற்று பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்

வயிறு உப்பசம் மற்றும் தொப்பை பிரச்சனை:

அதிக அத்திப்பழங்களை சாப்பிடுவதால் வயிறு கனமாகிறது. இதன் காரணமாக வயிற்று வலி (Stomach Pain) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்திப்பழங்களை சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரைக் குடித்தால், வயிற்று வலி ஏற்படாது. இது தவிர, அதிக அத்திப்பழங்களை சாப்பிடுவது வாயு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.

தீங்கு விளைவிக்கும் ஆக்சலேட்:

ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு அத்திப்பழங்களிலிருந்து வரும் ஆக்சலேட் தீங்கு விளைவிக்கும். இது வெள்ளை இரத்த அணுக்கள் தயாரிக்கப்படும் மண்ணீரலைக் கொல்லும். எனவே இதை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.

ALSO READ: Side Effects: இந்த உணவுகளை முட்டையுடன் சாப்பிட கூடாது

கல்லீரல் மற்றும் குடலுக்கு சேதம்:

அத்திப்பழத்தை அதிக அளவில் சாப்பிடுவது உங்கள் கல்லீரலிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது குடல் அடைப்பையும் ஏற்படுத்தும். அத்தி விதைகள் ஜீரணிக்க சற்று கடினமானவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இரத்தப்போக்கு பிரச்சினை:

அத்திப்பழம் இயற்கையில் சூடான ஒரு பழமாகும். ஆகையால், இதை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு இரத்தப்போக்கு (Bleeding) ஏற்பட வாய்ப்புள்ளது. இது சிலருக்கு விழித்திரை இரத்தப்போக்கையும் ஏற்படுத்தக்கூடும். மாதவிடாயும் குறிப்பிட்ட கால அளவுக்கு முன்பகாவே துவங்கிவிடலாம். 

கால்சியம் குறைபாடு:

அதிக அத்திப்பழங்களை சாப்பிடுவது கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தும். அத்திப்பழத்தில் ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை உடலில் உள்ள அனைத்து கால்சியத்தையும் உறிஞ்சுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், கால்சியம் குறைபாடு காரணமாக பல நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ALSO READ: Health Tips: தலை முதல் கால் வரை வாழைப்பழத் தோலால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News