உலகம் முழுவதிலும் பரவலாக விரும்பி பருகப்படும் பானம் தண்ணீர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவது இடத்தில் இருப்பதும் சிறிதும் சளைத்தது அல்ல. ஆம்!! தண்ணீருக்குப் பிறகு அதிக மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் தேநீராகும். தேநீரின் வித்தியாசமான சுவை மற்றும் பல நன்மைகள் காரணமாக, இது உலகின் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக உள்ளது.
தேநீரால் பல ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits) ஏற்படுகின்றன. நமக்கு உடல் சோர்வாக இருந்தாலோ, மனம் சோர்வுற்றாலோ, மனநிலையை மாற்றவோ, பொழுது போகவில்லை என்றாலோ, நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போதோ, இப்படி அனைத்து சந்தர்பங்காளிலும் தேநீர் நமக்கு அருதுணியயாக இருக்கும்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலை வகைகள் தயாரிக்கப்படுகின்றன. உண்மையில் பப்பில் தேநீர், ஷாமோமில் தேநீர், கிரீன் டீ (Green Tea), உலாங் தேநீர், ஐஸ் தேநீர், இனிப்பு தேநீர், மூலிகை தேநீர் என இதில் பல வகைகள் உள்ளன. தேநீர் பற்றிய இன்னும் சில சுவாரசியமான விஷயங்களை இங்கே காணலாம்.
'டா-ஹாங் பாவோ' என்பதுதான் உலகின் மிக விலையுயர்ந்த தேநீரின் பெயர். இந்த தேநீரின் ஒரு கிலோ விலை சுமார் 8 கோடி என்று கூறப்படுகிறது. இந்த தேநீர் மிக சிறந்த, வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரின் இலைகள் சீனாவின் புஜியனில் உள்ள வுய் மலைகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.
ALSO READ: Health News: வெறும் வயிற்றில் இவற்றிற்கெல்லாம் strict NO!!
உலகம் முழுவதும் பல தேநீர் (Tea) பிராண்டுகள் உள்ளன. ஆனால் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் தேநீர் பிராண்ட் எது என்று உங்களுக்குத் தெரியுமா? லிப்டன் தேநீர் தான் உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். லிப்டனின் பாட்டில் தேநீர் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.
1904 ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் முதல் முறையாக தேநீரை ருசித்தார்கள். செயின்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியின் போது, ஒரு நபர் தனது பண்ணையில் பயிரிடப்பட்ட தேயிலை மாதிரிகளை வைத்தார். இதற்குப் பிறகு, அதே நபர் தனது தேநீரில் பனியைப் பயன்படுத்தி ஐஸ் டீ தயாரித்திருந்தார்.
திபெத்திய (Tibet) மக்கள் தேநீரில் வெண்ணெயை போடுகிறார்கள். ஆம்!! ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதனால் அந்த தேநீரின் மணமும், ருசியும், குணமும் மேம்படுகின்றன. இங்குள்ள மக்கள் தேநீரின் சக்தி மற்றும் கலோரிகளை அதிகரிக்க வெண்ணெய் சேர்த்து தேநீரை தயாரிக்கிறார்கள். இது பொதுவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், இந்த தேநீர் சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகிறது.
நம்மில் பலர் டேசோகிராஃபி பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். தேயிலை இலைகள் பற்றிய தகவல்களை அளிப்பது அல்லது டீ ரீடிங்கை டேசோகிராஃபி என கூறுவார்கள். தேயிலைகளின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது கொசுக்களை (Mosquito) தூர ஓட்டுகிறது. பூச்சிகளை ஓட்டவும் நாம் தேநீர் பைகள் அல்லது தேநீர் வாசத்தை பயன்படுத்தலாம்.
வெயிலால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க தேயிலை பயன்படுத்தப்படுகிறது. தேநீரில் உள்ள டானின் உடலில் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.
ALSO READ: Health news: முட்டை உங்கள் நண்பனா எதிரியா? அது உங்கள் கையில் உள்ளது!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR