ஆரோக்கியத்திற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதிலும், சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம் என்ற சில காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லவை. மாங்காய், தேங்காய் என நீளும் அந்தப் பட்டியலில் கேரட்டுக்கும் முக்கிய இடம் உள்ளது. ஆனால், இந்த கேரட்டின் பல நன்மைகள் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், பெண்களின் பல உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்கும் தனிப்பண்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சரியான உணவைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சரியான் உணவு என்றால் அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் முக்கியமான தேர்வு ஆகும்.
காய்கறிகள் பல்வேறு வண்ணங்களில் இருந்தாலும், குளிர்காலத்தில் விளையும் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றவை. நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் கேரட், பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இருந்தாலும், கேரட்டில் உள்ள பல பண்புகள், பெண்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது.
கேரட்டை உட்கொள்வது பெண்களை 3 நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியுமா? கேரட், இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது, எப்படி அதிக நன்மைகளைத் தருகிறது என்பதையும் அறிந்து கொள்வோம்.
பெண்களுக்கு கேரட்டின் நன்மைகள்
மேலும் படிக்க | கருப்பு திராட்சையுடன் ஜோடி சேர்ந்து பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குங்குமப்பூ
ஹார்மோன் சமநிலையை பாதுகாக்கும் கேரட்
ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சமநிலையில் உள்ள சிக்கல்கள் பெரும்பாலும் பெண்களுக்கு அதிக தொல்லை தருவது. இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், பல பிரத்யேக நோய்களுக்கும் காரணம் ஆகிறது. கேரட் போன்ற வேர் காய்கறிகளை சாப்பிடுவது, ஈஸ்ட்ரோஜன் நிலையை கட்டுக்குள் வைக்கிறது. பிற ஹார்மோன்களின் அளவையும் பராமரிக்கிறது.
மாதவிடாய் வலி குறையும்
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படும். அவர்களுக்கு, கேரட் நல்லது. மாதவிடாய் காலங்களில், கேரட்டை சாலட் வடிவில் சாப்பிடலாம் அல்லது வேகவைத்து உண்ணலாம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கேரட் ஜூஸ் பருகுவது நல்லது.
சருமத்தை சுத்தப்படுத்தும் கேரட்
கேரட் சருமத்திற்கு ஒரு அற்புதமான மருந்து. கேரட்டில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் சில ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கின்றன மற்றும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
பச்சையாக அல்லது சமைத்த கேரட்டை எப்படி சாப்பிடுவது
கேரட் ஒரு காய்கறி, இது ஒரு வழியில் மட்டுமல்ல, பல வழிகளில் சாப்பிடலாம். பலர் கேரட்டை சாலட் வடிவில் சாப்பிட விரும்புகிறார்கள், சிலர் அவற்றை வேகவைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் கேரட்டை எப்படி சாப்பிடுவது அதிக பலன் தரும் என்பது பலரது மனதில் உள்ள கேள்வி.
வேகவைத்த கேரட்டை சாப்பிடுவது, பச்சை கேரட்டை விட அதிக ஆக்ஸிஜனேற்றம் கொண்டது என்றும், செரிமானத்தை மேம்படுத்துகிறது என வேளாண் மற்றும் உணவு வேதியியல் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | ’அந்த’ விஷயத்துக்கு மட்டுமில்ல: ‘இந்த’ அழகுக்கும் காரணம் முருங்கைக்காய்! தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ