அளவிற்கு அதிகமன உப்பு ஒரு ‘Silent Killer’; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு  சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2022, 06:55 PM IST
  • உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பழமொழி உண்டு.
  • உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும்.
  • உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும்.
அளவிற்கு அதிகமன உப்பு ஒரு ‘Silent Killer’; எச்சரிக்கும் நிபுணர்கள்! title=

நாம் அன்றாட சமையலில் பயன் படுத்தும் ஒரு பொருள் உப்பு. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பழமொழி உண்டு. ஆனால், உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு  சத்தமில்லாமல் உயிரை கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை. உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது, அத்துடன் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. எனினும், உணவில் உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

உப்பில் இருக்கும் ரசாயன பொருள்கள் உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயம் சீராக செயல்படவும் மிகவும் அத்தியாவசியமானது என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது.  அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிக உப்பை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உறிஞ்சி விடும். இதனால், நமது எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி, ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும், உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது. உப்பு அதிகமாக உட்கொள்வதால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம். 

மேலும் படிக்க |   கோவைப்பழ உதடு வேண்டுமா... தேனை ‘இந்த’ முறையில் பயன்படுத்துங்க!

ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள். தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும். எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு சிறந்தது. உப்பு அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள். ஊறுகாய், வத்தல் போன்ற அதிக உப்பு உள்ள பண்டங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான உப்பை சேர்த்து கொள்வதை பழக்கிக் கொண்டால் நீண்ட நாட்கள் உடல் நலத்தோடு வாழலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |  அளவிற்கு மிஞ்சினால் புரோட்டீனும் ‘விஷமாகி’ விடும்; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News