Eye health: பார்வை குறைபாட்டை நீக்கும்... பவர்ஃபுலான சோம்பு - பாதாம் பால்!

கண் பார்வை குறைப்பட்டிற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக மணிநேரம் கணிணி மற்றும் மொபைல் போன் மற்றும் பிற மின்னணு கேட்ஜட்டுகளில் நேரம் செலவழிப்பது ஆகியவை இதில் அடங்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2024, 01:27 PM IST
  • பார்வை குறைபாடு என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது.
  • கண் பார்வையை மேம்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் உதவும்.
  • கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கூட கண்ணாடியை அகற்றும் நிலை ஏற்படும்.
Eye health: பார்வை குறைபாட்டை நீக்கும்... பவர்ஃபுலான சோம்பு - பாதாம் பால்! title=

Powerful  Drink To Improve Eye Sight: கண் பார்வை குறைப்பட்டிற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக மணிநேரம் கணிணி மற்றும் மொபைல் போன் மற்றும் பிற மின்னணு கேட்ஜட்டுகளில் நேரம் செலவழிப்பது ஆகியவை இதில் அடங்கும்.  இதன் விளைவாக கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஏற்படுகிறது. அதனுடம் கண் நோய் ஆபத்துகளும் அதிகரிக்கிறது. குறிப்பாக விட்டமின் ஏ சத்து ( Vitamin A) குறைந்தாலும் கண பார்வை பாதிக்கப்படும்.

இன்றைய காலகட்டத்தில், மொபைல் சாதனங்கள், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பார்வை குறைபாடு என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. கண் பார்வையை மேம்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் உதவும். இவை கண் பார்வை கூர்மைக்கு தோவதோடு, கிளாக்கோமா கண் புரை நோய் போன்ற நோய்களையும் தடுக்கும்.

கண் பார்வை கூர்மையாகவும், கண் நோய்களை குறைக்க உதவும் ஆரோக்கிய பானம் பற்றி அறிந்து கொள்ளலாம். எளிதாக கிடைக்கும் மூன்று பொருட்களால் தயாரிக்கப்பட்ட இந்த பானம், கண் ஆரோக்கியத்திற்கு (Eye Health) மிகவும் சிறந்தது.

ஆயுர்வேத பானத்தை தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

1. ஒரு டம்ளர் பால்

2. அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் அல்லது சோம்பு

3. 4 அல்லது 5 பாதாம்

4. கல்கண்டு

ஆரோக்கிய நிபுணர்கள் இது குறித்து கூறுகையில் சோம்பு அல்லது பெருஞ்சீரகம், பாதாம் ஆகியவை இயற்கையாகவே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றும், பாலுடன் சேர்த்து இதனை குடிப்பதால், அணிந்திருப்பவர்கள் கூட கண்ணாடியை அகற்றும் நிலை ஏற்படும் என்கின்றனர். பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. பெருஞ்சீரகம் ஆயுர்வேதத்தில் நேத்ரஜோதி என்று அழைக்கப்படுகிறது. இதில் கண்பார்வையை மேம்படுத்தும் ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க | மாதவிடாய் வயிற்று வலியால் அவதியா? ‘இந்த’ யோகாசனங்களை ட்ரை பண்ணுங்க..

கண் பார்வை கூர்மைக்கான பானத்தை தயாரிக்கும் முறை

பெருஞ்சீரகம் பாதாம் மற்றும் கல்கண்டு எடுத்துக்கொண்டு, அவற்றை ஒன்றாக பொடி செய்து காற்று புகாத கொள்கைகளில் சேமித்து வைக்கவும். ஒரு தேக்கரண்டி பொடியை சூடான பாலில் கலந்தால், சூப்பரான மில்க் ஷேக் ரெடி. குடித்தால் நல்ல பலன் காணலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் கடுமையான பிரச்சனை இருந்தால், உங்கள் கண் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆயுர்வேத பானத்தின் பிற நன்மைகள்

மேலே குறிப்பிட்டுள்ள கலவையை பாலில் கலந்து குடிப்பதால் கண்பார்வை மேம்படுவது மட்டுமின்றி, செல் மீளுருவாக்கம், எலும்புகள் வலுவடையவும் உதவும். இதனால், மூட்டு வலி கீல்வாதம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும். மூளையின் செயல்பாட்டினை மேம்படுத்தும் திறன் இதற்கு உண்டு. அதுமட்டுமின்றி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த பானம் உதவும். மூளை பாதிப்பு, மறதி நோய் போன்றவையும் நீக்கும் திறனும் சோம்பு பாதாம் பாலுக்கு உண்டு. மூளையின் செயல்பாடும் மேம்படும்.   வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும் திறன் கொண்ட இந்த பானம் உடல் எடையை குறைக்கவும் உதவும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வழி இருக்கா? இது தெரியாம போச்சே..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News