தேன் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் உட்பட இதய வளர்சிதை மாற்றத்தையும் தேன் மேம்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தேன் சாப்பிடுவதால் இரத்த குளுக்கோஸ், எல்டிஎல் அல்லது 'கெட்ட' கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை கட்டுப்படுவது தெரியவந்துள்ளது மற்றும் இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. தேனில் 80 சதவீதம் சர்க்கரை உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர், அதேசமயம் தேன் என்பது பொதுவான மற்றும் அரிதான சர்க்கரைகள், புரதங்கள், கரிம அமிலங்கள் மற்றும் பிற உயிரிய கலவைகள் ஆகியவற்றின் சிக்கலான கலவையாகும்.
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தா அவ்வளவுதான்...உடனே இதச் செய்யுங்க
டேபிள் சுகர், சிரப் அல்லது வேறு இனிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக தேனை பயன்படுத்தலாம் என்றும், இதனை பயன்படுத்துவதால் இதய வளர்சிதை மாற்ற அபாயங்கள் குறையும் என கூறப்படுகிறது. தேன் தொடர்ந்து நடுநிலை அல்லது நன்மை பயக்கும் விளைவுகளையே தருகிறது. பொதுவாக தினமும் 40 கிராம் அல்லது சுமார் இரண்டு தேக்கரண்டி அளவு தேனை சாப்பிடுவது நல்லது, ஆனால் பதப்படுத்தப்பட்ட தேனை சாப்பிடுவது உங்களுக்கு நன்மையை அளிக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஏன்னென்றால் பதப்படுத்தப்பட்ட தேன் பாஸ்டுரைசேஷனுக்குப் பிறகு பல ஆரோக்கிய நன்மைகளை இழந்து விடுகிறது. பொதுவாக குறைந்தது 10 நிமிடங்களுக்கு 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட்ட தேன் பெரும்பாலும் நன்மை பயக்கும் பண்புகளை அழிக்காது. சூடாக்கப்படாத தேனை தயிருடன் சேர்த்து, ஒரு சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ