உடல் எடையை குறைக்கும் மதிய உணவுகள்: உடல் எடை அதிகரிப்பது தற்போதைய காலகட்டத்தின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் வந்த பிறகு, இந்த உடல் எடை அதிகரிப்பு இன்னுமும் அதிகரித்து வருகிறது. கோவிட்-19க்குப் பிறகு, லாக்டவுன் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மக்களின் உடல் செயல்பாடுகள் குறைந்து, இடுப்பு மற்றும் வயிற்றில் கொழுப்பு குவியத் தொடங்கியது, இப்போது மீண்டும் பழைய உடல்நிலைக்கு திரும்புவது கடினமான காரியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் உங்களின் மதிய உணவில் இந்த 3 பொருட்களை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மளமளவென குறையும்.
இந்த 3 உணவுகளை மதியம் சாப்பிடுவது உங்கள் எடையை குறைக்கும்
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி அவசியம், ஏனெனில் இவை கொழுப்பை எரிக்க உதவும், ஆனால் அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட வேண்டும். அதன்படி மதிய உணவின் போது என்ன சாப்பிட்டால், உங்கள் எடையை விரைவாகக் குறையும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
காய்கறிகள்: நம் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை அனைவரும் அறிவோம், ஏனெனில் இதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன, மேலும் உடல் சரியாக வேலை செய்ய உதவுகின்றன. குறிப்பாக பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால், உடலுக்கு வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
பருப்புகள்: பொதுவாக, புரதத்தின் தேவை பருப்புகளின் உதவியுடன் பூர்த்தி செய்யப்படுகிறது, ஆனால் அதனுடன் உடல் இரும்பு மற்றும் துத்தநாகத்தையும் பெறுகிறது. எடை அதிகரிப்பதைத் தவிர, இவை பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.
தயிர்: மதியம் எப்போது உணவு உண்டாலும், அதன் பின் தயிர் சாப்பிடுங்கள், விரும்பினால் மோர் கூட அருந்தலாம், இது வயிற்றில் உள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமானமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தேன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ