இ-சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு நோய்வரும் அபாயம்...

புகையிலை சிகரெட்டை விட இ-சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் அபாயம் இருமடங்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

Last Updated : Oct 17, 2018, 06:26 PM IST
இ-சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு நோய்வரும் அபாயம்... title=

புகையிலை சிகரெட்டை விட இ-சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் அபாயம் இருமடங்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாஸிங்க்டன் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் ஒன்றில் புகையிலை சிகரெட்டை விட இ-சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் அபாயம் இருமடங்கு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வில் சுமார் 69,452 பேர் பங்கேற்றுள்ளனர். இ-சிகரெட் மற்றும் புகையிலை சிகரெட் பயன்படுத்துபவர்கள் இருவரின்  உடல் நலமும் பரிசோதிக்கப்பட்டது. ஆய்வில் இ-சிகரெட் பயன்படுத்தியவர்கள் பெரும்பாலோனர்க்கு மாரடைப்பு வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 9,352 பேரில் மின்னனு சிகரெட்டை பயன்படுத்தியவர்களில் 333 பேர் (3.6%) நபர்களுக்கு ஏதோ ஒரு சூழலில் மாரடைப்பு வந்துள்ளதென ஆய்வு கூறுகிறது.

தினமும் இ-சிகரெட்டை பயன்படுத்துபவர்கள் என்கிற அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தினமும் இ-சிகரெட்டை பயன்படுத்துபவர்களில் 6.1சதவீதம் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. புகையிலை சிகரெட்டை பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் மாரடைப்பைப் போலவே மின்னனு சிகரெட் பயன்படுத்துபவர்களும் எதிர்கொள்கின்றனர்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, இந்த இரண்டு வகையான சிகரெட்டையும் பயன்படுத்துபவர்களுக்கு 4.6 மடங்கு அதிகமாக மாரடைப்பு வருவதற்கான அபாயம் உள்ளது. ஆய்வாளர் ஸ்டேண்டன் க்ளான்ஸ், இளைஞர்கள் பலர் தொடர்ச்சியாக மின்னனு சிகரெட்டை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார். மக்கள் பலரும் இ- சிகரெட்டினால் அபாயம் குறைவு என நம்புகின்றனர். ஆனால், இந்த ஆய்வு  மாரடைப்பு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதென்பதை கண்டறிந்துள்ளது.

புகையிலை சிகரெட்டிற்கு மாற்றாக இனி இ-சிகரெட் பாதுகாப்பானது எனப் பரிந்துரைக்க முடியாது. இ- சிகரெட்டினால் நுரையீரல் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தும் அதிகம் உள்ளதென ஆய்வு கூறுகிறது.

 

Trending News