மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் உடனடியாக சூடான தேநீர் அருந்துவதால் (esophageal cancer risk) எஸாகேஜியல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 30 முதல் 79 வயது உள்ள புற்றுநோய் தாக்கிய 456,155 பேரிடம் 10 ஆண்டுகளாக ஓர் ஆய்வை நடத்தியுள்ளனர்.
அதன் முடிவில் அதிக மது அருந்திவிட்டும் புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவது புற்றுநோயால் இறப்பு உண்டாவதை ஐந்து மடங்கு அதிகப்படுத்தும் என கண்டறிந்துள்ளனர்.
மது அருந்திவிட்டும், புகை பிடித்துவிட்டும் சூடாகத் தேநீர் அருந்துவதால் தொண்டைக்குழி, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வகைப் புற்றுநோய் தாக்கியவர்கள் உயிர் பிழைக்கும் விகிதம் குறைவு என்றும் கூறப்படுகிறது.