உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்த கிரீன் டீயை தினமும் குடிப்பது நல்ல பழக்கம் தான் என்றாலும், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சாகும். ஆர்வக் கோளாறு காரணமாக சிலர் ஒரு நாளைக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் க்ரீன் டீ குடிப்பார்கள். அதிகமாக குடித்தால் உடல் எடை விரைவில் குறையும் என நினைத்து அவ்வாறு செய்கின்றனர். ஆனால், அதிக அளவில் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையாது என்பதோடு, சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
க்ரீன் டீயில் உள்ள ஆயுர்வேத குணங்கள் காரணமாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இதை உட்கொள்ளலாம். இது ஒரு ஆரோக்கியமான பானம் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதை அதிகமாக உட்கொண்டால் அது தீங்கு விளைவிக்கும். கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி அதிக கலோரிகளை எரிக்கின்றன. எனவே, எடையைக் கட்டுப்படுத்த, (Weight Loss Tips) குறைந்த அளவுகளில் அதை உட்கொள்வது நல்லது தான். அதே நேரத்தில், அளவிற்கு அதிகமாக ஒரு நாளைக்கு பல முறை உட்கொள்வது பயனளிக்காது.
டாக்டர். பயோஸ் பாண்டே கிரீன் டீயின் பக்க விளைவுகள் குறித்து கூறுகையில் ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ குடிக்கலாம். அந்த அளவிற்கு அதிகமாகக் குடிப்பது ஆரோக்கியத்தை காலி செய்வது விடும் என எச்சரிக்கிறார். இதனால், கவலை, எரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே, ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீக்கு மேல் குடிக்க வேண்டாம் என்கிறார்.
அளவிற்கு அதிகமான கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
1. தூக்கமின்மை
பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும், ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஆனால் நீங்கள் தினமும் 2 கப் கிரீன் டீக்கு மேல் குடித்தால், நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம், பின்னர் நீங்கள் எரிச்சலடைவீர்கள்.
2. ஊட்டச்சத்து குறைபாடு
கிரீன் டீயை அளவிற்கு அதிகமாக குடிப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படும், இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த இரண்டு வகையான சத்துக்களும் குறைந்தால் பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? இவற்றில் கவனம் செலுத்தினால் போதும்
3. செரிமான பிரச்சனைகள்
க்ரீன் டீயை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படும். இது நம் வயிற்றுக்கு நல்லதல்ல. இதனால் அஜீரணம், வாயு, வாந்தி போன்ற பிரச்சனைகளை உண்டாகும். அதோடு, வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் உடலில் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. இது மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் உணர்வை ஏற்படுத்தக் கூடும்.
4. உடல் பலவீனம் மற்றும் சோர்வு
க்ரீன் டீயை அளவிற்கு அதிகமாக குடிப்பவர்கள் அடிக்கடி சோர்வு மற்றும் பலவீனமாக உணரக் கூடும். எனவே, நீங்கள் காரணமில்லாமல் அதிக சோர்வாக இருந்தால், அளவிற்கு அதிகமாக கிரீன் குடிக்க பழக்கம் இருப்பவர்கள் அதனை கைவிட வேண்டும்.
5. சரும பிரச்சனைகள்
க்ரீன் டீயை அளவிற்கு அதிகமாக குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நமது சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஏனெனில் இந்த பானத்தில் உள்ள பொருட்கள் அரிப்பு மற்றும் சரும அழற்சி உள்ளிட்ட சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ