வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அதிலும் மாணவர்கள் அதிகம் வெண்டைக்காய் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நினைவுத்திறனை மேம்படுத்தவும், மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெண்டைகாய் உதவுகிறது. வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மூளைக்கு மட்டுமல்ல, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடலாம்.
புற்று நோய் செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உள்ளது.. வயிறு இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் செரிமான அமிலங்களின் சமசீரற்ற நிலை உட்பட பல பிரச்சனைகளை தீர்க்க அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
Also Read | கோதுமையை விட 6 மடங்கு நார்ச்சத்து கொண்ட குதிரைவாலியின் நன்மைகள்
கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேர்ந்தாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்னையை சரி செய்வதில் வெண்டைக்காய் சிறப்பாக செயல்படுகிறது.
நமது உடலில் உள்ள ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறும்போது சிலருக்கு உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சத்து குறைபாடு ஏற்படாது. உடலில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் சரியான அளவில் இருக்க வெண்டைக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு பல அற்புத நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காய், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அதீத பசி உணர்வு குறைந்து அளவுக்கதிகமாக தோன்றாது. அதாவது, தொடர்ந்து வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும். அதோடு, உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடலும் கட்டுக்கோப்பாக இருக்கும்.
Also Read | பார்லி சூப்பின் மருத்துவ பயன்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR