தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. பொதுவாக கோவில்களிலும், இந்து மத சடங்குகளிலும் மட்டுமே தர்ப்பைப் புல் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். தர்ப்பை புல்லில் ஊறிய நீர் மிகவும் சக்தி வாய்ந்தது.
தர்பை, குளிர்தன்மையைக் கொண்ட தாவரம். அதனால், சூடு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க இது உதவுகிறது. அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
ஒரு சில துண்டு தர்பையை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால், அது வெயிலின் தாக்கத்தை குறைத்து, குளுமையைக் கொடுக்கும். கிரகணங்கள் ஏற்படும்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால், கிரகணத்தால் ஏற்படும் தீயவிளைவுகள் பொருட்களை பாதிக்காது என்பது இந்தியாவில் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும்.
Also Read | குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக இருக்க எளிய குறிப்புகள்
தர்பைப் புல் இருக்கும் இடத்தில் தொற்றுநோய் ஏற்படாது என்பதால், கிராமங்களில் வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். தர்பைப்பைப் புல் பொதுவாக எல்லா இடங்களிலிலும் வளராது, மிகவும் தூய்மையான இடங்களில் மட்டுமே வளரும் என்றும் கூறப்படுகிறது.
இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட தர்பைப் புல்லை குடிநீரில் போட்டு வைத்து, அந்த நீரைக் குடித்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் குணமாகும்.
நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்ற உணவு பொருட்களில் சில துண்டு தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும் என்றும் நம்பப்படுகிறது.
Also Read | சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமானத்திற்கு உதவுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR