சிறுநீரக நோய் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரக நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் பல்வேறு பொருட்களை சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் அதிக சோடியம் உணவு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்பனேடட் பானங்கள் போன்றவை அடங்கும். சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டால், உங்கள் உணவு முறையை சரியாக கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் ஆகும். இந்த விஷயங்களை மனதில் வைத்து, நீங்கள் சாப்பிட தவிர்க்க வேண்டிய அந்த 8 விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊறுகாய்: ஊறுகாய் சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒரு சைட் டிஷ்ஷாக உள்ளது. ஆனால், எவ்வளவு ஆசையாக இருந்தாலும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க | வெங்காய டீ குடித்திருக்கிறீர்களா? செய்முறை மற்றும் பலன்கள் இதோ
பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சுவையை மேம்படுத்த அதிக உப்பு மற்றும் ப்ரிசர்வேடிவ்கள் சேர்க்கப்படுகின்றன. அதிக இறைச்சி சாப்பிடுவது சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
உப்பு: உணவில் அதிக உப்பு இருந்தால், நீங்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் போராட வேண்டியிருக்கும். இது சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. துரித உணவு, பாக்கெட் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள்: நீங்கள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் பிற உயர் புரத உணவுகளிலிருந்து விலகி இருங்கள்.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக நோயாளிகள் இந்தப் பழத்தைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக, அன்னாசிப்பழம் சாப்பிடலாம், இதில் வைட்டமின் ஏ உள்ளது.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. ஆகையால் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும் என்றால், இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதை உட்கொள்ளலாம்.
இனிப்பு பானங்கள்: இனிப்பு சோடாக்கள் மற்றும் கோலாக்கள் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் பாஸ்பேட் உள்ளது. இது கல் உருவாவதற்கு வழிவகுக்கிறது. அவற்றில் உள்ள பிரக்டோஸ் சிறுநீரகத்திற்கும் ஆபத்தானது.
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்: அதிக பாஸ்பரஸ் உள்ள உணவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பால், பருப்புகள், முழு தானியங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் அல்லது மிதமாக உட்கொள்ள வேண்டும்.
சிறுநீரகம் நமது உடலின் வடிகட்டியாகும். இது உடலில் பல்வேறு செயல்முறைகளின் கீழ் உருவாகும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சிறுநீர் மூலம் நீக்குகிறது. சிறுநீரகச் செயல்பாடு சீர்குலைந்தால், உடலில் உள்ள திரவங்களின் சமநிலை சீர்குலைந்து, உடலில் விஷம் நிறைந்திருக்கும். இந்த சூழ்நிலையில் மரணமும் ஏற்படலாம். அதனால்தான் சிறுநீரகம் வலுவாக இருப்பது மிகவும் அவசியம். சிறுநீரகத்தின் இந்த கூடுதல் சுமை காரணமாக, அவ்வப்போது சிறுநீரகத்தில் இருக்கும் நச்சு நீக்குவது அவசியம். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவில்லை என்றால், சிறுநீரக செயல்பாடு சரியாக இருக்காது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொழுப்புகளை இந்த ஆரோக்கியமான உணவுகள் மூலம் சரி செய்ய முடியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ