Sex Life: எந்தவொரு உறவும் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. அதேபோல திருமணத்திற்கு பின் தாம்பத்தியம் என்பது அவர்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உதவும். உங்கள் தாம்பத்திய வாழ்க்கையுடன் தொடர்புடைய அந்த நெருக்க உணர்வு உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். இருப்பினும், உங்களுக்கும் உங்கள் துணையின் மகிழ்ச்சிக்காகவும், உங்கள் உறவின் ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு உங்களால் முடிந்த நேரத்தை செலவிட வேண்டும். உங்களுக்குள் இருக்கும் ஆசைகளைப்பற்றி தெளிவாக பேச வேண்டும். உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும். உங்களிடம் இருக்கும் சில பொதுவான பழக்கவழக்கங்கள் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனயை ஏற்படுத்தலாம். ஒருவேளை இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். வாருங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிக்கும் ஐந்து காரணங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்,
தீய பழக்கங்கள்
இந்த பழக்கங்களை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு குட்பை கொடுக்கலாம்! எனவே தொடர்ந்து படித்து தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அதிலிருந்து விடுபடுங்கள். (படம்: பிக்சபே)
மேலும் படிக்க: உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் பெண்களை விட்டு விலகுவதற்கான 3 காரணங்கள்
கேஜெட் பயன்படுத்துதல்
நீங்கள் படுக்கையில் இருக்கும் போது கூட உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினியை விட்டு வெளியேற முடியாதா? நீங்கள் எப்போதும் அந்த சரியான செல்ஃபியை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இது உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு ஒரு பேரழிவு.
அதிகமாக சாப்பிடுவது அல்லது தாமதமாக சாப்பிடுவது
தவறான உணவை சாப்பிடுவது அல்லது தாமதமாக சாப்பிடுவது அஜீரணத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் உடலுறவு விருப்பத்தை நிச்சயமாக பாதிக்கும். சரியான நேரத்தில் உணவும், குறைவான உணவும் சிறந்தது.
குழந்தைகளுடன் தூங்குவது
இந்தியாவில், குறிப்பாக, குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோருடன் தூங்குகிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தின் படமாக இருந்தாலும், குழந்தைகளை எப்போதும் ஒரே படுக்கையில் உங்களுடன் உறங்குவது உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு விடைபெறுவதாகும்.
மேலும் படிக்க: ’விலகுவதும் ஆரோக்கியமே’ காதல் செட்டாகாது என முடிவெடுக்க வேண்டிய தருணம்!
மன அழுத்தம்
மன அழுத்தம் உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு மிகவும் மோசமாக இருக்கலாம். இது உங்கள் மனநிலையை மட்டும் பாதிக்காது, மன அழுத்தம் உங்கள் செக்ஸ் டிரைவையும் பாதிக்கும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
படுக்கையில் செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள் அழகானவை மற்றும் அனைத்துவிதமான அன்பிற்கும் தகுதியானவை. ஆனால் செல்லப்பிராணிகள் எப்போதும் உங்கள் படுக்கையில் இருந்தால், அது நிச்சயமாக உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்ததல்ல.
மேலும் படிக்க: தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதை செய்யுங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ