மார்பக புற்று நோயை பற்றிய விபரங்கள்....

Last Updated : Oct 4, 2017, 01:59 PM IST
மார்பக புற்று நோயை பற்றிய விபரங்கள்.... title=

உலக அளவில் பெண்களைப் பெரிதும் அச்சுறுத்தும் நோய் மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க் அக்டோபர் என்ற பெயரில் உலகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளபடுகிறது.

1 மார்பக புற்றுநோய் அறிகுறிகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம் :

# மார்புக் காம்பில் இருந்து ரத்தம் வடிதல்

# மார்புக் காம்புப் பகுதியில் தோல் உரிதல் 

# மார்பின் சிவப்பு அல்லது கருமை, வீக்கம் அடைதல்.

# மார்பின் தோற்றம் மாற்றம் அடைதல்.

# முலைக்காம்பயை சுற்றி ஒரு சொறி போன்ற அறிகுறிகள் 

2 மார்பக புற்றுநோய்யை தடுக்க சில வழிமுறைகள் : 

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்கள் ஆவாது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும்.

மார்பகங்கள்  எடுப்பான தோற்றம் பெற லூசான ஆடைகளை தவிர்த்து உள்ளாடையை இருக்கமாக அணிதால் நல்லது.

மகிழம் பூவை பறித்து வைத்து கட்டிக் கொண்டால் மார்புகள் எடுப்பான தோற்றம் அளிக்கும். 

மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். 

மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். 

3 மார்பக புற்றுநோய்யை தடுக்கு உணவுமுறைகள் : 

அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மூலம் மார்பக புற்றுநோய்யை தடுக்கலாம்.   

அதிகாலை வெறும் வயிற்றில், பாலில் பூண்டை வேகவைத்து பின்னர் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம்  மார்பக புற்றுநோய்யை தடுக்கலாம்.

மார்பக புற்றுநோய்க்கு பப்பாளிப் பழம் சிறந்த உணவாகும் 

அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும். 

வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

4 தானாகவே எப்படி மார்பக புற்றுநோய்யை பரிசோதனை செய்வது : 

மார்பக பரிசோதனையை நாம்  கண்ணாடி முன்னால் நின்று செய்து பார்ப்பது நல்லது. 

வலது மார்பகத்தைப் பரிசோதனை செய்யும்போது இடது கையையும், இடது மார்பகத்தைப் பரிசோதனை செய்து பார்க்கும்போது வலது கையையும் பயன்படுத்த வேண்டும். 

உடைகளைக் களைந்து கையின் மூன்று விரல்களில் லேசாக சோப்பு, தேங்காய் எண்ணெய், குளிப்பதற்குப் பயன்படுத்தும் ஜெல் ஆகியவற்றில் ஒன்றைத் தடவிக்கொள்ள வேண்டும். 

பின்னர் கைக்கு அடியிலிருந்து மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் நன்றாக மார்பகத்தை அழுத்திக் கட்டிகள் போல் ஏதேனும் தென்படுகிறதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 

மார்புக் காம்புகளில் இருந்து நீர் அல்லது ரத்தக் கசிவு ஏற்படுகிறதா என்று காம்புப் பகுதியைக் கசக்கிப் பார்க்க வேண்டும். 

5 மார்பக புற்றுநோயை தடுக்கும் வீட்டிலே எளிய முறைகள்:

புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. 

மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால்.

இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.

பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.

மார்பக புற்றுநோய்யைக் கண்டு பெண்கள் பயப்பட தேவையில்லை :  

புற்றுநோய்களை போன்று அல்லாமல் மார்பகப் புற்றுநோயை முன்னதாகக் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். அந்த வகையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான இந்த பிங்க் அக்டோபர் மாதத்தில் நம் வீட்டிலிருந்தே விழிப்புணர்வைத் தொடங்கலாம்.

Trending News