உலகத்தையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது தடுப்பூசி.
தற்போது, இந்த மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி (Covid Vaccine) வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த முக்கியமான தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தடுப்பூசி.பாதுகாப்பு இயக்கம் மேலும் விரிவடைகிறது. 2022 மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும்.
India may begin inoculating children in 12-14 age group against COVID-19 in March as 15-18 population is likely to get fully vaccinated by then: Dr N K Arora, chairman of COVID-19 working group of NTAGI
— Press Trust of India (@PTI_News) January 17, 2022
கொரோனா பரவல் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையானது கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதியன்று தொடங்கியது.
ALSO READ | தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய அனைவரையும் வணங்குகிறேன்: பிரதமர் மோடி
முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், என அடுத்தடுத்தக் கட்டத்தினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில், 18 வயதுக்கும் அதிகமானவர்களுக்கும் வழங்கப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பு, இந்த ஆண்டு, ஜனவரி-3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் வழங்கப்பட்டது.
தற்போது, கொரோனாவுக்கான தடுப்பு முயற்சியில் தடுப்பூசி போடும் பணி 12 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, தடுப்பூசி இயக்கத்தில் தொடர்புடைய ஒவ்வொரு தனிநபரையும் தான் வணங்குவதாக மோடி (PM Narendra Modi), தெரிவித்தார்.
தடுப்பூசி இயக்கத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கை பாராட்டிய பிரதமர், கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவின் தடுப்பூசி திட்டம் பெரும் பலத்தை சேர்த்துள்ளது என்றார்.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR