உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை1,04,87,022. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,11,546 ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53,36,322
இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று இந்தியாவில் ஆறு லட்சத்தையும் தாண்டிவிட்டது.
ஆஸ்திரேலியா: 300,000 மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் புறநகர்ப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவுவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்த உதவும் ரெம்டிசிவிர் மருந்தை பெருமளவில் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை (1,50,000) தாண்டியது.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிமாக இருக்கும் முதல் பத்து நாடுகளின் பட்டியல்:
1. அமெரிக்கா - 26,86,258
2. பிரேசில் - 14,48,753
3. ரஷ்யா - 6,53,479
4. இந்தியா - 6,04,641
5. இங்கிலாந்து - 3,14,992
6. பெரு - 2,88,477
7. சிலி - 2,82,043
8. ஸ்பெயின் - 2,49,659
9.இத்தாலி - 2,40,760
10. மெக்சிகோ - 2,31,770